Twitter-ஐ விட்டு தெறித்து ஓடிய இந்திய ஊழியர்கள்.. காலியாகும் இந்திய அலுவலகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் டிவிட்டரை மொத்தமாகக் கைப்பற்றியதால் முதலீட்டாளர்கள் தப்பித்தாலும், டிவிட்டர் ஊழியர்கள் வசமாக மாட்டிக்கொண்டு உள்ளனர் எனச் சொல்ல தான் வேண்டும். சமுக ஊடகங்களில் டிவிட்டரில் எலான் மஸ்க்-கிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவிற்கு எதிர்ப்பும் உள்ளது.

இந்த நிலையில் டிவிட்டர் இந்திய அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் விட்டால் போதும்டா சாமி எனத் தெறித்து ஒடி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா-வை கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவும் எலான் மஸ்க்..! டெஸ்லா-வை கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவும் எலான் மஸ்க்..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து 2 முறை மிகப்பெரிய ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்தாலும், எலான் மஸ்க் டார்கெட் மற்றும் கடுமையான பணி சூழலை தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருவது மட்டும் அல்லாமல் விட்டால் போதும் எனவும், வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்ததை கையோடு பை பை சொல்லிவிடுகிறார். இதில் இந்திய அலுவலகம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..

அக்டோபர்

அக்டோபர்

அக்டோபர் மாதம் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியதில் இருந்து டெல்லி, பெங்களூர், மும்பை ஆகிய இந்திய அலுவலகங்களில் இருந்து குறைந்த பட்சம் சுமார் 50 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா..?

250 ஊழியர்கள்

250 ஊழியர்கள்

எலான் மஸ்க் வருவதற்கு முன்பு டிவிட்டர் இந்திய அலுவலகங்களில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது பணிநீக்கம் மற்றும் ராஜினாமா மூலம் சுமார் 170 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்திய அலுவலகங்கள்

இந்திய அலுவலகங்கள்

இதுமட்டும் அல்லாமல் இந்திய அலுவலகங்களில் பணியாற்றி வரும் 80 ஊழியர்களிடமும் எலான் மஸ்க் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதாலும், மிகவும் இறுக்கமான பணி சூழல் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா டூ இந்தியா

அமெரிக்கா டூ இந்தியா

இதன் மூலம் எலான் மஸ்க் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்விதமான டிரீட்மென்ட் வழங்கப்படுகிறதோ அதேபோலத் தான் இந்தியாவிலும் அளிக்கப்படுவதாகக் கூறினாலும், பலர் சான் பிரான்சிஸ்கோ ஊழியர்கள் தான் எலான் மஸ்க் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிகிறது.

Days of Rest முடிந்தது

Days of Rest முடிந்தது

பொதுவாகப் பெரு நிறுவனங்களில் இருக்கும் சலுகைகள் அனைத்தையும் எலான் மஸ்க் ரத்துச் செய்துள்ளார், இதை டிவிட்டர் ஊழியர்களுக்கு Days of Rest முடிந்தது என்று அறிவித்தே செய்தார். இதேபோல் இந்தியாவில் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற எலான் மஸ்க் நேரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

இந்திய டிவிட்டர் ஊழியர்கள்

இந்திய டிவிட்டர் ஊழியர்கள்

இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் முன்பெல்லாம் வொர்க் ஷெட்யூல் இருக்காது, ஆனால் தற்போது அனைத்துத் தரப்பு இந்திய டிவிட்டர் ஊழியர்களுக்கு அதிகப்படியான நெருக்கடி உள்ளது. குறிப்பாக இந்திய இன்ஜினியர்கள் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் கழுத்தை நெறிக்கும் அளவிலான பணிகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின்பு முதலீட்டாளர்களை வெளியேற்றிவிட்டு, முக்கிய அதிகாரிகளையும், தனது திட்டத்திற்கு எதிராக இருக்கும் உயர் அதிகாரிகளை வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து டிவிட்டர் வருமானத்திற்கும், ஊழியர்கள் எண்ணிக்கைக்கும் சற்றும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

4 மில்லியன் டாலர்

4 மில்லியன் டாலர்

அதாவது ஒரு நாளுக்கு 4 மில்லியன் டாலர் அளவிலான செலவுகளை ஏற்படுத்தும் கட்டமைப்பைக் கொண்டு தொடர்ந்து நஷ்டத்தையும், பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது.

எலான் மஸ்க் பாராட்டு

எலான் மஸ்க் பாராட்டு

இதை இரண்டுமே எலான் மஸ்க் தனது கடுமையான நடவடிக்கை மூலம் சில மாதத்திலேயே செய்துள்ளார். இதனால் எலான் மஸ்க் நடவடிக்கைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk's harsh leadership made Indian twitter offices left with just 80 employees from 250

Elon musk harsh leadership made indian twitter offices left with just 80 employees from 250 after 2 layoffs and a resignation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X