எலான் மஸ்க் திடீர் மனமாற்றம்.. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு அதிகமாக தேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் சுற்றுச்சுழல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்த நிலையில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய எலான் மஸ்க் ஆரம்பம் முதல் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு-வை பயன்படுத்துவதை எதிர்த்து வந்தார்.

இதுமட்டுமா கிரிப்டோகரன்சி-யை பெரிய அளவில் ஆதரவு அளித்து வந்த நிலையில், கிரிப்டோ-வை உருவாக்க எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகவே கிரிப்டோகரன்சியை அதரிப்பதை நிறுத்தினார்.

இதோடு புதிதாகக் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்திக்கும், தேடலுக்கும் முதலீடு செய்யக் கூடாது என உலக நாடுகள் முடிவெடுத்த நிலையில் பெரிய அளவில் ஆதரவு அளித்தவர் எலான் மஸ்க். ஆனால் இன்று திடிரென் மனமாறியுள்ளார். ஏன்..? எதற்காக..?

சத்தமில்லாமல் சொத்தை பிரித்த முகேஷ் அம்பானி..! சத்தமில்லாமல் சொத்தை பிரித்த முகேஷ் அம்பானி..!

டெஸ்லா

டெஸ்லா

 

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ஐரோப்பிய எனர்ஜி தலைவர்களிடம் பேசும் போது உலக நாடுகளுக்கு அதிகக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவை என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் அதிக முதலீடு செய்யும் அதே வேளையில் அணு மின் நிலையங்களைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கூறினார்.எனர்ஜி

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

நமக்கு உண்மையில் அதிகக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை, ஆனால் இதே நேரத்தில் நிலையான ஆற்றல் பொருளாதாரத்திற்கு நம்மால் முடிந்தவரை வேகமாக நகர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என டெஸ்லா-வின் எலான் மஸ்க்நார்வேயின் ஸ்டாவஞ்சரில் நடந்த மாநாட்டில் கூறினார்.

பேட்டரி-சேமிப்புத் தொழில்நுட்பம்

பேட்டரி-சேமிப்புத் தொழில்நுட்பம்

எலான் மஸ் கூறுகையில் காற்று, சூரிய மற்றும் புவிவெப்ப எனர்ஜி (GeoThermal Energy) ஆகியவற்றில் முதலீடு செய்வதை விடவும் மேம்பட்ட பேட்டரி-சேமிப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி முக்கியமானது. இதில் நானும் பணியாற்றி வருகிறேன் தெரிவித்தார்.

அணுமின் நிலையம்

அணுமின் நிலையம்

நாம் அணுமின் நிலையங்களைத் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும். சில நாடுகளில் இது பிரபலமற்ற பார்வையாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால் நன்கு வடிவமைக்கப்பட்ட அணுமின் நிலையம் இருந்தால், அதை எந்தக் காரணத்திற்காகவும் மூடக்கூடாது, குறிப்பாக இப்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் எலான் பேசியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk Says World Needs More Oil and Gas now

Elon Musk Says World Needs More Oil and Gas now | எலான் மஸ்க் திடீர் மனமாற்றம்.. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு அதிகமாகத் தேவை..!
Story first published: Monday, August 29, 2022, 21:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X