கிடைப்பதை எல்லாம் விற்கும் எலான் மஸ்க்.. பீதியில் டிவிட்டர் ஊழியர்கள் ..?! உண்மை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் 2வது பெரிய பணக்காரர், 6 நிறுவனங்களுக்குச் சிஇஓ, நவீன உலகின் ஐன்ஸ்டீன் இப்படிப் பலரும் பல விதமாகப் புகழ்ந்து வரும் எலான் மஸ்க் சில நேரம் என்ன செய்கிறார் என்று தெரிந்து தான் செய்கிறாரா..? என்ற கேள்வி எழும் அளவிற்கு எலான் மஸ்க் நடந்துகொள்வார்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பொருட்கள் ஆன்லைனில் ஏலத்தில் விற்பனை செய்யப் பட்டியலிடப்பட்டு உள்ளது.

எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் ஆரம்பம் முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும் இத்தளத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 70% பணியாளர்களைக் குறைக்கும் GoMechanic.. கதறும் ஊழியர்கள்..! 70% பணியாளர்களைக் குறைக்கும் GoMechanic.. கதறும் ஊழியர்கள்..!

டிவிட்டர் அலுவலகம்

டிவிட்டர் அலுவலகம்

இந்த நிலையில் தான் டிவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு வாடகை கொடுக்காமல் எலான் மஸ்க் நிர்வாகம் உள்ளது எனச் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் வாடகை பணம் எப்போது செலுத்தப்படும் என்பது இன்னும் தெரியாமல் இருக்கும் வேளையில் டிவிட்டர் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் விஷயம் வெளியாகியுள்ளது. உண்மை என்ன..?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் அனுமதி உடன் டிவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருக்கும் பிரபலமான பறவை சின்னம், பல உயர்தரச் சமையலறை உபகரணங்கள், காபி டேபிள்கள், பிரிண்டிங் உபகரணங்கள், டிசைனர் சோஃபாக்கள், சவுண்ட் ப்ரூஃப் கான்ஃபரன்ஸ் பூத் மற்றும் மற்ற கார்ப்பரேட் அலுவலகச் சொத்துக்கள் என 100க்கும் அதிகமான பொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப் பட்டியலிடப்பட்டு உள்ளது.

வாடகை பிரச்சனை

வாடகை பிரச்சனை

டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் அலுவலக இடங்களுக்கான வாடகையைச் செலுத்த போதுமான பணம் இல்லாமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியான நேரத்தில் இந்த டிவிட்டர் அலுவலகப் பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்ற செய்தி பெரும் வேள்வியை எழுப்பியுள்ளது.

உண்மை என்ன..?

உண்மை என்ன..?

உண்மையில் யோசித்தால் சில பொருட்களை விற்பனை செய்தால் வாடகையோ அல்லது ஊழியர்களின் சம்பளமோ கொடுக்க முடியாது. ஆனால் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்யும் போது ஊழியர்கள் அலுவலகத்தை ஏதுவாக அனைத்து விதத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் கூடுதல் வருமானம் எப்போது நல்ல விஷயம் தான்.

படுக்கை அறை

படுக்கை அறை

சமீபத்தில் ஊழியர்களின் வசதிக்காக டிவிட்டர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு floor-லும் படுக்கை அறையை அமைத்தார். இதேபோல் பல இடத்தில் டெக் அணிகள் ஆலோசனை செய்யப் பெரிய ஸ்கிரீன் கொண்ட மானிடர்களை அமைத்தார்.

வாடகை

வாடகை

இதேபோல் அலுவலகத்திற்கு வாடகை செலுத்த விஷயத்திற்கு வந்தால். தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் சந்தையில் உருவாகியுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக அலுவலகங்கள் அடுத்தடுத்து காலி செய்யப்பட்டு வருகிறது.

மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட்

மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட்

பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள பெல்லூவ் பகுதியில் உள்ள அலுவலகங்களை அடுத்தது காலி செய்து வருகிறது. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் எலான் மஸ்க் என்றால் மிகையில்லை.

எலான் மஸ்க் சாதனை

எலான் மஸ்க் சாதனை

எலான் மஸ்க் சமீபத்தில் ஒரு வருடத்தில் அதிகப்படியான சொத்து மதிப்பை இழந்ததாகக் கின்னஸ் புத்தகத்தில் அவரின் பெயர் பதிவானது. கடந்த மாதம், டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் அவர் இழந்தார். இதோடு டெஸ்லா கார்களின் விலையும் குறைப்பதாக அறிவித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk selling twitter office stuffs on online Auction; This creates New buzz between tech employees

Elon musk selling twitter office stuffs on online Auction; This creates New buzz between tech employees
Story first published: Wednesday, January 18, 2023, 22:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X