எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு... திணறும் டெஸ்லா ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு காரணமாக அவரது டெஸ்லா ஊழியர்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை முடிந்துவிட்டதாகவும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் இந்த உத்தரவு காரணமாக அலுவலகம் திரும்பிய பலருக்கு சரியான வசதி கிடைக்கவில்லை என்பதால் ஊழியர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.

எலான் மஸ்க் இடத்தை கைப்பற்றப்போகும் முகேஷ் அம்பானி..! எலான் மஸ்க் இடத்தை கைப்பற்றப்போகும் முகேஷ் அம்பானி..!

 டெஸ்லா எலான் மஸ்க்

டெஸ்லா எலான் மஸ்க்

டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரியும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகங்கள் வந்து பணிபுரிய வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டார். தனது நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் ஒரு மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

வசதி இல்லாததால் திணறல்

வசதி இல்லாததால் திணறல்

ஆனால் அவர் உத்தரவிட்ட மூன்று மாதங்களுக்கு பின்னரும் டெஸ்லா நிறுவனம் இன்னும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைத்து வருவதற்கான போதுமான வசதிகளையோ, அலுவலத்தில் போதுமான இடத்தையோ செய்து தரவில்லை. இதனால் அலுவலகம் வருவதற்கும், அலுவலகத்தில் பணிபுரிவதற்கும் ஊழியர்கள் திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஊழியர்கள் அதிருப்தி

ஊழியர்கள் அதிருப்தி

அமெரிக்காவில் உள்ள டெஸ்லா ஊழியர்கள் தற்போது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வேலைக்கு வந்தாலும் ஊழியர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறை இருப்பதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 அதிகாரம் இல்லை

அதிகாரம் இல்லை

கேபிள்களை சார்ஜ் செய்வது போன்ற அடிப்படை வசதிகள் கூட பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆனால் இந்த பிரச்னைகள் குறித்து பேச அதிகாரம் இல்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அறைகள் இல்லை என்றும், சில ஊழியர்கள் வெளியில் உட்கார்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைகளை நிவர்த்தி செய்வாரா?

குறைகளை நிவர்த்தி செய்வாரா?

அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிட்ட எலான் மஸ்க், ஊழியர்களின் அதிருப்தியை போக்க தேவையான வசதியை செய்து கொடுப்பாரா? ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk strict return to office policy is affecting Tesla employees!

Elon Musk strict return to office policy is affecting Tesla employees! | எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு... திணறும் டெஸ்லா ஊழியர்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X