ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ள தொழிலாளர் கொள்கைகள்.. அப்படி என்ன மாற்றம் வரலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸினால் இன்று உலகமே நடு நடுங்கி போயுள்ளது என்று தான் கூற வேண்டும். இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து, ஒரு வித அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் எங்கு சென்றாலும், அங்கு என்ன நடக்கிறது. யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட, அது பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூட தயக்கம் காட்டுகிறார்கள்.

ஆனால் அதிலும் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் சில நல்ல விஷயங்களும் உண்டு.

பிரச்சனைகளில் மாற்றம் வரலாம்

பிரச்சனைகளில் மாற்றம் வரலாம்

அதில் இன்று நாம் காணப் போவது தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் சில மாற்றங்கள் தான். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது தொடர்வதால் இந்தக் கொள்கைகளில் மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் விதமாக தொழிலாளர் கொள்கைகளில் மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய பணிச் சூழலுக்கு ஏற்றவாறு சம்பள விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம்.

பொருத்தமான சம்பளம்

பொருத்தமான சம்பளம்

மேலும் ஊழியர்களுக்கான விடுமுறை குறித்தான கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிறது ஒரு அறிக்கை. மேலும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள், வங்கித் துறைகள், வேகமாக நுகரும் பொருட்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் மிகப் பொருத்தமான சம்பள கூறுகளை அறிமுகப்படுத்துகின்றன என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கொள்கைகள்

புதிய கொள்கைகள்

மேலும் நிறுவனங்கள் துறைவாரியாக பணியிடங்கள் மற்றும் மனித வள கொள்கைகள் என புதிய கொள்கைகள் என மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகின்றன என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட நிபுணரான கைதன் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் அன்ஷூவல் பிரகாஷ் கூறியுள்ளார்.

செலவு குறையும்

செலவு குறையும்

எனினும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பயண செலவுகள் குறையும். இதன் காரணமாக அவர்களுக்கு பயண செலவு குறையும். இதனால் நிறுவனங்கள் செலுத்தும் அலவன்ஸ் செலவுகள் குறையும். அதே போல எரிபொருளுக்கென கொடுக்கும் அலவன்ஸ், ஓட்டுனர்களுக்கு கொடுக்கும் செலவு, வாகனங்களை பராமரிக்கும் செலவு உள்ளிட்டவை குறையும் என்றும் பிரகாஷ் கூறியுள்ளார்.

இப்படி கூட இருக்கலாம்

இப்படி கூட இருக்கலாம்

ஆக இதன் மூலம் சேமிக்கும் பணத்தினை செயல்பாட்டு செலவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் புதிய திருத்தத்தில் அதிவேக இணைய இணைப்புகளுக்கான அலவன்ஸ் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் அறிக்கை படி, உடல் ஆரோக்கிய பயன்பாடுகள், வீட்டு அலுவலக வசதிகள், வீட்டு உதவி அல்லது குழந்தை பராமரிப்புக்கான செலவுகள் போன்ற அலவன்ஸ்களை உள்ளடக்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோங்க ஊழியர்களுக்கு நல்லது நடந்தால் நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employee’s policies may change since Work from home

As people continue to work from home, allowance, leave and harassment policies might change, said employment and labour law experts that are advising them.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X