ஐடி ஊழியர்களுக்கு செக்.. 41 நாள் தான் டைம்.. அப்புறம் ரிசைன் பண்ணுங்க.. சொல்வது யார் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப நாட்களாக ஐடி துறைக்கு சாதகமான செய்திகள் வெளியே வந்து கொண்டிருந்ததையடுத்து, அது ஐடி ஊழியர்களுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது.

இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி வந்தன. இதன் காரணமாக சந்தோஷத்தின் உச்சிக்கே ஐடி ஊழியர்கள் சென்றனர்.

ஆனால் இதனை ஒட்டுமொத்தமாக வாரி எடுத்துச் செல்லும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஊழியர் சங்கம் குற்றம் சாட்டல்
 

ஊழியர் சங்கம் குற்றம் சாட்டல்

அது ஐடி ஜாம்பவான்களில் ஒருவரான காக்ணிசன்ட் நிறுவனம், தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக ஒரு புத்திசாலித்தனமான விஷயத்தினை கையாண்டுள்ளது என ஐடி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஒரு அறிக்கையையும் ஐடி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் படி காக்ணிசன்ட் அதன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

41 நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்யுங்கள்

41 நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்யுங்கள்

சரி அப்படி என்ன தான் காக்ணிசன்ட் நிறுவனம் சொன்னது வாருங்கள் பார்க்கலாம். அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான காக்ணிசன்ட், அதன் சென்னை அலுவலகங்களில் உள்ள பெஞ்ச் ஊழியர்களை 41 நாட்களுக்கு பிறகு அவர்களின் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது. இது குறித்து NDLF குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அடுத்தடுத்த புகார்கள்

அடுத்தடுத்த புகார்கள்

இது குறித்து NDLF வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாங்கள் காக்ணிசன்ட் பணி நீக்கம் செய்ய தீவிரமாக முயன்று வருவதை நாங்கள் அறிந்தோம். அவர்களது ஊழியர்களில் பலர் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ளனர், அவர்களில் உள்ள தொழில்சங்க உறுப்பினர்களில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ராஜினாமா குறித்த அச்சுறுத்தல் புகார்கள் எங்களிடம் வந்துள்ளன.

பெஞ்ச் ஊழியர்களை குறிவைக்க என்ன காரணம்?
 

பெஞ்ச் ஊழியர்களை குறிவைக்க என்ன காரணம்?

காக்ணிசன்ட் குறிப்பாக அதன் பெஞ்ச் ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்ல காரணம் என்ன? ஐடி துறைகளில் பெஞ்ச் ஊழியர்கள், செயலில் உள்ள திட்டங்களில் இல்லாதவர்கள். எதிர்கால திட்டங்களுக்கான வைக்கப்படுகிறார்கள். ஒரு ஊழியர் பெஞ்சில் வைக்கப்பட்டவுன் காக்ணிசன்ட் அவர்களை மேம்படுத்துவதற்கு 35 நாட்கள் அவகாசம் வழங்கும். அதன் பிறகு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தும்.

புதிய திட்டம் என்ன?

புதிய திட்டம் என்ன?

இந்த 35 நாட்களுக்கு பிறகு 6 நாட்கள் நீட்டிக்கப்படும். ஆக அந்த 41 நாட்களில் அந்த ஊழியருக்கு ஒரு புதிய திட்டத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்கிறது. அவ்வாறு நிறுவனம் கூறுவது போல் ராஜினாமா செய்யவில்லை எனில், அவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆக இந்த முறைப்படி பல ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதையும் நாங்கள் அறிவோம் என்றும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சாத்தியமற்றது.

சாத்தியமற்றது.

41 நாட்களில் ஒரு புதிய திறனுடன் புதிய திட்டத்தினை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்ற விஷயம். ஆக காக்ணிசன்ட் மறைமுகமாக தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்கிறது. கடந்த சில நாட்களில் காக்ணிசன்ட் அலுவலகங்களைக் சேர்ந்த பல ஊழியர்கள் ஏற்கனவே தங்களது கடமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employee union said Cognizant forcing benched employees in Chennai to resign after 41 days

Cognizant forcing benched employees in Chennai to resign after 41 days, said employee union.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X