ஊழியர்கள் மனநல பாதிப்பால் இந்திய நிறுவனங்களுக்கு 14 பில்லியன் டாலர் நஷ்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்கள் மத்தியிலான மோசமான மனநலம் இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 14 பில்லியன் டாலர் அளவிலான தொகை கூடுதலாகச் செலவாகிறது என்ற முக்கியமான ஆய்வுகள் கூறுகிறது.

சுமார் 4,000 தொழிலாளர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் நிறுவனத்தின் ஊழியர்களின் மோசமான மனநிலை காரணமாக லீவ் எடுப்பது, நிறுவனத்தை விட்டு முக்கியமான கட்டத்தில் வெளியேறுவது, இன்னும் பல காரணங்களால் நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறது என டெலாய்ட் நிறுவன ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 ஆன்லைனில் பான் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? ஆன்லைனில் பான் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?

மனநலப் பிரச்சினை

மனநலப் பிரச்சினை

இந்திய நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகள் பற்றி நிறுவனங்களும் சரி, அரசும் சரி நீண்ட காலமாகப் பேச தயங்கி வருகிறது. ஆனால் இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் ஆகியவை மக்களை work life balance மற்றும் நல்வாழ்வு குறித்தும் அதிகம் பேச துவங்கியுள்ளனர்.

டெலாய்ட் நிறுவனம்

டெலாய்ட் நிறுவனம்

டெலாய்ட் நிறுவனத்தின் கணக்கெடுக்குப்பில் பங்குபெற்ற சுமார் 47 சதவீதம் பேர் பணியிடங்கள் தொடர்பான மன அழுத்தத்தைத் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணியாகக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து நிதி மற்றும் கோவிட் -19 சவால்களை முக்கியப் பிரச்சனையாகக் கூறியுள்ளனர்.

80 சதவீத இந்திய பணியாளர்கள்

80 சதவீத இந்திய பணியாளர்கள்

டெலாய்ட் நிறுவனத்தின் இந்தக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, 80 சதவீத இந்திய பணியாளர்கள் மனநலப் பிரச்சினைகளைப் புகாரளித்ததாகக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

மோசமான நிலை

மோசமான நிலை

மேலும் இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 33 சதவீதம் பேர் மோசமான மனநலம் இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை செய்ததாகவும், அதே நேரத்தில் 29 சதவீதம் பேர் சில நாட்கள் ஓய்வு எடுத்து பணியாற்றுவதாகவும், 20 சதவீதம் பேர் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு (WHO) மதிப்பீட்டின்படி, மோசமான மனநலம் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பாதிப்பை எதிர்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் 2019ல் WHO ஆய்வின் படி இந்தியாவில் மட்டும், 2012 மற்றும் 2030 க்கு இடையில் மனநல பாதிப்பால் பொருளாதார இழப்பு சுமார் 1.03 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employees Mental health issues cost Indian companies 14 billion dollar a year says Deloitte report

Employees Mental health issues cost Indian companies 14 billion dollar a year says Deloitte report ஊழியர்கள் மனநல பாதிப்பால் இந்திய நிறுவனங்களுக்கு 14 பில்லியன் டாலர் நஷ்டம்..!
Story first published: Friday, September 9, 2022, 21:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X