பெங்களூர் பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர்: சீன நபர்களால் கட்டுப்படுத்தப்படும் சட்டவிரோத இன்ஸ்டென்ட் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான கடன் செயலிகளுக்கு எதிராக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக நாட்டின் முக்கியமான பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க துறை திடீர் சோதனை செய்துள்ளது.

 

இந்தியாவில் சீன மொபைல் செயலிகள் மூலம் பிரச்சனைகள் உருவாகி வரும் வேளையில் அமலாக்க துறையின் இந்த அதிரடி சோதனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..! சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..!

சீன நபர்கள்

சீன நபர்கள்

சீன நபர்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் செயலிகளுக்கு எதிராக அமலாக்க துறை பெங்களூரில் இருக்கும் ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ்ஃப்ரீ போன்ற ஆன்லைன் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பெங்களூர்

பெங்களூர்

கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள 6 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை பணிகள் இன்றும் நடைபெற்று வருவதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அமலாக்க துறை சோதனை

அமலாக்க துறை சோதனை

இந்தச் சோதனையின் போது, 'வணிகர் ஐடி-கள் மற்றும் இந்தச் சீன நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி ஆவணங்கள்
 

போலி ஆவணங்கள்

இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சீனர்கள் நிறுவனங்களின் போலி இயக்குநர்களாக ஆகி குற்றச் செயல்களின் ஈடுப்பட்டு இந்திய சந்தையில் இருந்து பல கோடி ரூபாய் அளவிலான மோசடிகளைச் செய்துள்ளது என அமலாக்க துறை குற்றம் சாட்டியுள்ளது.

விவோ நிறுவனம்

விவோ நிறுவனம்

இந்தப் போலி ஆவணங்களை வைத்து நிறுவனத்தில் தலைவர் பதவிகளைக் கொண்டு செயல்பட்டதால் மோசடி செய்வது மிகவும் எளிதாகியுள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் விவோ நிறுவனத்தின் சோதனையின் போதும் இத்தகைய குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

18 எஃப்ஐஆர்

18 எஃப்ஐஆர்

மொபைல் மூலம் சிறிய அளவிலான கடனைப் பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துவது தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள்/ நபர்கள் மீது பெங்களூரு போலீஸ் சைபர் கிரைம் ஸ்டேஷன் பதிவு செய்த குறைந்தபட்சம் 18 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ED தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Enforcement Directorate raids Razorpay, Paytm, Cashfree in Chinese loan apps case in bengaluru

Enforcement Directorate raids Razorpay, Paytm, Cashfree in Chinese loan apps case in bengaluru பெங்களூர் பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X