குட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் எண் உடன் ஈபிஎப் கணக்கின் UAN இணைக்கப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் UAN மற்றும் ஆதார் எண் இணைக்காத பல கோடி மக்களுக்கு 3 மாதம் அவகாசம் பெற உள்ளனர். திடீர் கால நீட்டிப்புக்கு என்ன காரணம் தெரியுமா..?

ஊழியர்களின் தரவுகளில் கோளாறு

ஊழியர்களின் தரவுகளில் கோளாறு

ஊழியர்களின் பலரின் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றில் பிஎப் கணக்கிற்கும் ஆதார் மற்றும் பான் தகவல்களுக்கும் ஒத்துப்போகாத நிலை இருக்கும் காரணத்தால் 3 மாத கால அவகாசத்தை EPFO அமைப்பு கொடுத்துள்ளது.

ஊழியர்களின் பணம்

ஊழியர்களின் பணம்

இது மட்டும் அல்லாமல் பிஎப் கணக்கில் தரவுகள் சரியாக இல்லாத ஊழியர்களின் பணத்தை முறையற்ற வகையில் பல அமைப்புகள் பயன்படுத்த நேரிடும். இதனால் வரும் காலத்தில் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்துள்ளது EPFO அமைப்பு.

பிஎப் கணக்கில் நிறுவன பங்கு

பிஎப் கணக்கில் நிறுவன பங்கு

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தங்களது பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. இப்படி இணைக்காத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு பிஎப் தொகையை ஊழியர்கள் பிஎப் கணக்கில் வைப்புச் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

3 மாத அவகாசம்

3 மாத அவகாசம்

இப்புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த மாதம் சம்பளத்தில் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது இக்கட்டுப்பாட்டைச் செப்டம்பர் 1 வரையில் ஒத்திவைத்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கை ஆதார் எண் உடன் இணைக்க அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

UAN எண் உடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி..?!

UAN எண் உடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி..?!

1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்

2. உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திருங்கள்.

3. மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, KYC கிளிக் செய்யுங்கள்

4. KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

5. ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள்.

6. ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள், அதன் பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

7. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும்.

8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை நீங்கள் பெறுவீர்கள். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO has extended upto Sep1 to link Aadhaar with the UAN number

EPFO has extended upto Sep1 to link Aadhaar with the UAN number
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X