பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இறப்பு காப்பீடு ரூ.7 லட்சம் வரை உயர்கிறதா? உண்மை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டு திட்டத்தின் (EDIL) கீழ், சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் இறப்பு காப்பீட்டின் பலன் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

கெசட் (gazette) அறிவிப்பின் படி, ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டு திட்டத்தின் (EDLI) கீழ் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும், இறப்பு காப்பீட்டு விகிதத்தினை 2.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக லைவ் மிண்ட் செய்தி கூறுகின்றது.

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இறப்பு காப்பீடு ரூ.7 லட்சம் வரை உயர்கிறதா? உண்மை நிலவரம் என்ன?

இது முன்பு 2 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குறைந்தபட்ச விகிதமும், அதிகபட்ச விகிதமும் அதிகரிக்கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஎல்டிஐ திட்டத்தின் கீழ் இணைந்துள்ள சந்தாதாரர்கள் ஒரு வேளை துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தாருக்கு அந்த நன்மை சென்றடையும். தற்போது EPFO-வில் 50 மில்லியன் பயனாளர்கள் உள்ள நிலையில், 2 மில்லியனுக்கும் அதிகமான EDLI சந்தாதாரர்கள் உள்ளனர்.

எனினும் கடந்த 2018ல் இந்த குறைந்தபட்ச விகிதமானது 2 லட்சம் ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று கூறப்பட்ட நிலையில், அது பிப்ரவரி 14, 2020ல் அன்று எக்ஸ்பெய்ரி ஆகிவிட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி 15, 2020 முதல் மேற்கண்ட நிபந்தனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து இதுவரையில் இந்த அதிகாரப்பூர்வ உடன்படிக்கை என்பது இதுவரை போடப்படவில்லை என்பதே உண்மை. மேலும் இந்த நிபந்தனை பரிசீலனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆக இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO increases maximum death insurance benefit Rs.7 lakh, is it true?

EPFO latest updates.. EPFO increases maximum death insurance benefit Rs.7 lakh, is it true?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X