PF வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் ஷாக்! இந்த வருஷம் 8.5 % வட்டி வருமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் முறையாக நிறுவனங்களில் சம்பளம் வாங்குபவர்கள், மத்திய அரசின் PF திட்டங்களில் கட்டாயம் இணைந்து இருப்பார்கள்.

 

அப்படி இணைந்து இருக்கும், நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை PF-க்காக, மாதா மாதம், சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களே பிடித்தம் செய்து, அரசின் EPFO அமைப்பிடம் செலுத்திவிடுவார்கள்.

இந்த PF பணத்துக்கு ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகக் கொடுப்பார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டியாக நிர்ணயித்து இருக்கிறார்கள்.

வட்டி பஞ்சாயத்து

வட்டி பஞ்சாயத்து

இப்போது இந்த வட்டிப் பணத்தை முழுமையாக, PF வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியுமா என்பது தான் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஏன் அரசு 8.5 சதவிகிதம் வட்டி கொடுக்க முடியாதா..? என்ன பிரச்சனை..? பங்குச் சந்தைக்கும், PF வட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

பங்குச் சந்தை முதலீடு

பங்குச் சந்தை முதலீடு

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் EPFO அமைப்பு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கியது. ஆனால் PF வழியாக திரட்டப்படும் மொத்த பணத்தில் 5 - 15 % மட்டுமே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும் எனச் சொன்னது தொழிலாளர் நலத் துறை அமைச்சகம்.

2017-ல் 15 %
 

2017-ல் 15 %

கடந்த 2015-ம் ஆண்டில், PF வழியாக திரட்டிய மொத்த பணத்தில், வெறும் 5 சதவிகித பணத்தை மட்டுமே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கியது. மே 2017-ம் ஆண்டில் தனக்கு ஒதுக்கிய 15 சதவிகித பணத்தையும் பங்குச் சந்தைகளில் முதலீடுச் செய்துவிட்டது EPFO அமைப்பு. தற்போது, EPFO அமைப்பு, exchange traded funds (ETFs)-களில் முதலீடு செய்து இருக்கும் மொத்த முதலீட்டுத் தொகை சுமாராக 95,500 கோடி ரூபாயாக இருக்கிறதாம்.

கூட்டம்

கூட்டம்

PF வழியாக திரட்டப்படும் மொத்த பணத்தில், ஒரு பகுதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது போக, மீத தொகைகளை அரசு கடன் பத்திரங்களில் தான் முதலீடு செய்து வைத்திருக்கிறது EPFO. எனவே கடந்த மார்ச் 06, 2020 அன்று கூடிய EPFO கூட்டத்திலேயே 8.15 % வட்டியை, கடன் பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்கள். மீதமுள்ள 0.35 % வட்டிக்குத் தான் பங்குச் சந்தை முதலீடுகளாக ETF ஃபண்டுகளை விற்று வெளியே எடுப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.

மிஸ் பண்ணிட்டாங்க

மிஸ் பண்ணிட்டாங்க

கடந்த மார்ச் 11, 2020 அன்று தான் உலக சுகாதார அமைப்பு (WHO), இந்த கொரோனா வைரஸை பெரும் தொற்று நோயாக அறிவித்தது. அதற்கு முன்பே, மத்திய அரசு, தன் பங்குச் சந்தை முதலீடுகளில் இருந்து பணத்தை வெளியே எடுத்து இருக்கலாம். ஆனால் பணத்தை வெளியே எடுக்கவில்லை. இப்போது பங்குச் சந்தைகளும் தினம் தோறும் புதிய சரிவை நோக்கி சரிந்து கொண்டு இருக்கின்றன.

8.5 % சிரமம் தான்

8.5 % சிரமம் தான்

எனவே சொன்ன படி இந்த 2019 - 20 நிதி ஆண்டில், PF வாடிக்கையாளர்களுக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுக்க முடியாமல் போகலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த கொரோனாவின் அட்டுழியம் தாங்க முடியல. எங்கு கை வைத்தாலும், கொரோனாவின் கோரத்தை உணர முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO may not pay 8.5 percent interest to subscribers for FY 20

The Employees’ Provident Fund Organisation (EPFO) may not pay the 8.5 percent return to its 6 crore subscribers for FY20.
Story first published: Friday, March 20, 2020, 13:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X