இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி மக்களுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் பாராசிட்டமால் உட்படப் பல அத்தியாவசிய மருந்தின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து 10.7 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..!
இந்த 10.7 சதவீதம் என்பது மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்படும் அதிகப்படியான விலை உயர்வு அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்துகள்
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி வலி நிவாரணிகள் (பெயின்கில்லர்), நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆன்ட்பயோடிக்), தொற்று எதிர்ப்பு (ஆன்ட் இன்பெக்ட்வ்) பிரிவில் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் (NLEM) இருக்கும் சுமார் 800க்கும் அதிகமான மருந்துகளின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து 10.7 சதவீதம் வரையில் உயர்த்தப்படும்.

10.7 சதவீதம் உயர்வு
இதன் மூலம் பாராசிட்டமால், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்புகள், பாக்டீரியா தொற்று, இரத்த சோகை எதிர்ப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்ற மருந்துகளின் விலை உயர உள்ளது.

கூடுதல் சுமை
ஏற்கனவே இந்தியாவில் மருத்துவச் சேவைகள் மற்றும் மருந்துகளின் விலை அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் மூலம் மக்களுக்குக் கூடுதல் சுமை உருவாகியுள்ளது. மேலும் நாட்டின் முன்னணி பார்மா நிறுவனங்கள் மருந்து விலையை 20 சதவீதம் வரையில் உயர்த்த கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று மருந்துகள்
தற்போது விலை உயர்த்தப்படும் மருந்துகளில் கொரோனா தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகளும் அடக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மொத்த விலை பணவீக்க குறியீடு இணையாக இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது.

WPI தரவுகள்
பொருளாதார ஆலோசகர் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய WPI தரவுகளின் அடிப்படையில், 2021 காலண்டர் ஆண்டில் மொத்த விலை பணவீக்க அளவீடு 10.76607 சதவீதம் எனக் கணக்கிடப்பட்ட உள்ளது என்று NPPA அறிவிப்பில் தெரிவித்துள்ளது.