ஐரோப்பா-வின் குடுமி தற்போது ரஷ்யா-வின் கையில் உள்ளது என்றால் மிகையில்லை.ரஷ்யா-வை நம்பி பல வருடங்களாகத் தனது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வரும் நிலையில் தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது ஐரோப்பா.
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உடன் சேர்ந்து ஐரோப்பாவும் பல பிரிவுகளில் தடை விதித்த நிலையில், தற்போது பலி வாங்கும் விதமாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.
சவுதி அரேபியா: 10 வருடத்தில் நடந்த தரமான சம்பவம்.. முகமது பின் சல்மான் கொண்டாட்டம்..!

ஐரோப்பா - ரஷ்யா
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது.

குளிர்காலம்
ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில்...

எரிவாயு தேவை
தற்போது ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்காக ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளை மட்டுமே நம்பியிருக்கிறது. இதில் எந்த ஒரு நாட்டில் இருந்து எரிவாயு வராமல் போனால் கட்டாயம் பெரிய நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும்.

விலை உயர்வு
ஐரோப்பாவில் தேவை மூலம் சர்வதேச சந்தையில் எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளதால் இதன் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் சீனா மீது உலக நாடுகள் தடை விதிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

சீனா
சீனா ஒருபக்கம் தைவான் நாட்டைக் கட்டம் கட்டி அடிக்கத் துவங்கியிருக்கும் வேளையில், ரஷ்யா ஐரோப்பா-வை வைச்சுச் செய்து வருகிறது. இதனால் அடுத்த 3 மாதம் சர்வதேச பொருளாதார மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி இன்ஜின்
உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா, அமெரிக்கா ஆதரவில் ஜனநாயக நாடாக இருந்து வரும் தைவான் நாட்டைச் சீனா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. தைவான்-ஐ கைப்பற்ற ரஷ்யா-வை போல் சீனாவும் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்றவும் சீன தயாராக இருக்கிறது.

சீனா - தைவான்
அப்படிச் சீனா தைவான் நாட்டைப் போர் மூலம் கைப்பற்றினால் ரஷ்யா மீது வல்லரசு நாடுகள் விதித்த தடையைத் தான் சீனா மீது விதிக்கும். இதைத் தெரிந்துகொண்டு தான் சீனா தைவான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.

பெரும் பாதிப்பு
சீனா மீது உலக நாடுகள் தடை விதித்தால் கட்டாயம் உலக நாடுகள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இந்தியப் பாதிப்பு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஆப்பிரிக்கா என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நாடுகளும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்
ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவுக்கு புதிய பிரச்சனை.. கடைசியில் பாதிப்பு மக்களுக்கு தான்..!