அடக் கொடுமையே.. சாமியாருடன் ரகசிய தகவல்கள் பகிர்வு.. வசமாக சிக்கிய NSE இயக்குனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்கு சந்தை பற்றிய ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்தாக செபி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியாரிடம் பொருளாதார ஆலோசனை மற்றும் பங்கு சந்தை ரகசியங்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!

இதற்கிடையில் தான் செபியின் கட்டுப்பாட்டு வளையத்தில் சித்ரா சிக்கியுள்ளார்.

ஆன்மீக பற்று

ஆன்மீக பற்று

குறிப்பாக இந்த சாமியரின் வழிகாட்டலின்படியே நிர்வாக தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவை, ஆனந்த் சுப்ரமணியன் உளவியல் ரீதியாக தனது சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சித்ராவுக்கு உள்ள மிகப்பெரிய ஆன்மீக பற்றினை தனது சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஆனந்த், இப்படி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

தேவையில்லாத மெயில்

தேவையில்லாத மெயில்

மேலும் ரகசிய மெயில் மூலமாக சித்ராவுக்கு மெயில் வருவதும், அதனை அப்படியே செய்வதுமாக இருந்துள்ளார். இதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களை பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்கு சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளது. இது அதன் நிர்வாக குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தை என செபி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மூன்று சம்பளவு

மூன்று சம்பளவு

இமயமலையில் இருப்பதாக கூறப்படும் பெயர் தெரியாத சாமியார் ரிக் யஜூர் சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள மெயில் ஐடி க்குதான் இத்தகைய ரகசிய தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மெயில் படி தான் என் எஸ் இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று சம்பள உயர்வு அளித்து, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சித்ரா கடந்த 2013 - 2016ம் ஆண்டில் நிர்வாக இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில், இவர் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி, தொடர்ந்து கவனம் செலுத்திய நிலையில் அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

செபியின் அதிரடி நடவடிக்கை

செபியின் அதிரடி நடவடிக்கை

இதற்கிடையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 3 கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த் சுப்ரமனியனுக்கு 2 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்கு சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது எனவும் செபி அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

 நம்பிக்கை தகர்ப்பு

நம்பிக்கை தகர்ப்பு

NSE-யின் நிதி மற்றும் வணிகத் திட்டங்களை பகிர்ந்து கொள்வது ஒரு, பங்கு சந்தை மீதான நம்பிக்கையையே அசைத்து பார்த்துள்ளது. இது பங்கு சந்தையில் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக இப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: nse என்எஸ்இ
English summary

Ex -NSE chief Ramakrishna shared secrets with unknown person

Ex -NSE chief Ramakrishna shared secrets with unknown person/அடக் கொடுமையே.. சாமியாருடன் ரகசிய தகவல்கள் பகிர்வு.. வசமாக சிக்கிய NSE இயக்குனர்..!
Story first published: Sunday, February 13, 2022, 21:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X