எலிசபெத் ராணி-யிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள்.. தலை சுத்துதுடா சாமி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றில் பிரிட்டன் நாட்டிற்கு எப்படி நீங்க முடியாத முக்கியப் பங்கு வகிக்கிறதோ, அதேபோலத் தான் பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத். 2ஆம் உலகப் போர் முடிந்த பின்பு பல முக்கியமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரிட்டன் நாட்டின் ராணியாக அரியணை ஏறிய எலிசபெத் தனது 96 வயதில் காலமானார்.

ராணி எலிசபெத் கடந்த சில நாட்களாகவே மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் இருந்தார், இந்நிலையில் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அரசு குடும்பத்தினர் அனைவரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட் மாளிக்கை விரைந்தனர்.

1952ல் அரியணைக்கு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிகக் காலம் ராணியாக இருந்தவர் தான் இரண்டாம் எலிசபெத்.

இந்நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வைத்திருக்கும் காஸ்ட்லியான பொருட்கள் எது தெரியுமா..?

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டது..!உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டது..!

HMY Britannia கப்பல்

HMY Britannia கப்பல்

இந்தக் கப்பலின் கட்டுமானம் 1952 இல் தொடங்கியது, ஏப்ரல் 16, 1553 முதல் பயணிக்கத் துவங்கியது, HMY Britannia கப்பல் 43 வருட பயணத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 நாட்டிகல் மைல்களுக்கு மேல் பயணித்தது.

HMY Britannia கப்பல் 1997 இல் தனதப் பயணத்தை நிறுத்தப்பட்ட நிலையில், அரசு குடும்பத்தின் முக்கியச் சொத்தாகக் கருதப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பை காட்டிலும் இதன் வரலாறு முக்கியமானதாக விளங்குகிறது.

 

ஓவியம் சேகரிப்பு

ஓவியம் சேகரிப்பு

உலகின் மிகப்பெரிய தனியார் கலைத் தொகுப்பின் உரிமையாளராக விளங்குகிறார் ராணி எலிசபெத், அரசு குடும்பத்திடம் தற்போது சுமார் 10 லட்சம் ஓவியங்கள், வாட்டர்கலர்கள், வரைபடங்கள் மற்றும் அச்சிட்டுகளை வைத்திருக்கிறது.

இந்த 10 லட்சம் சேகரிப்பில் பெரும்பாலானவை அரசு குடும்பத்திற்குச் சொந்தமானவை, இருப்பினும் சில ராணி எலிசபெத் ஆசைப்பட்டு சொந்தமாக வைத்துள்ளார். இதன் மதிப்பு பலமில்லியன் டாலராக இருக்கும்.

பிரிட்டன் அரசு குடும்பத்தின் ஆர்ட் கலெக்ஷனிஸ் ரெம்ப்ராண்ட், மைக்கேலேஞ்சலோவின் உருவப்படங்களும், லியோனார்டோ டா வின்சியின் குறைந்தது 600 வரைபடங்களும் அடங்கும்.

 

நிலம்

நிலம்

ராணி எலிசபெத் தலைமையிலான பிரிட்டன் அரசு குடும்பம் சுமார் 60 லட்சம் ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது. இந்த நிலத்தின் மொத்த விலையைத் துல்லியமாக நிர்ணயிக்க முடிந்து என்பதால் தோராயமாக 33 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 ராயல் மீன்வளம்

ராயல் மீன்வளம்

யுனைடெட் கிங்டமின் நீர் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து திறந்த நீர் மீன்வளத்தையும் ராணி சொந்தமாக வைத்திருக்கிறார். இதில் ஸ்டர்ஜன், திமிங்கலங்கள், போர்போயிஸ் மற்றும் டால்பின்கள் ஆகியவை அந்த நேரத்தில் அதிகாரப்பூர்வமாக ராணி அல்லது மன்னருக்கு சொந்தமானவை எனச் சட்டம் உள்ளது.

 அன்ன பறவைகள்

அன்ன பறவைகள்

இங்கிலாந்தின் ராணி, அல்லது அந்த நேரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் 5300 ஜோடி அன்ன பறவைகளுக்குச் சொந்தமானவர். லண்டன் தேம்ஸ் நிதியில் இதைப் பார்க்க முடியும். ஒரு அன்ன பறவை முட்டை 300 டாலர் அளவில் மதிப்பிடப்படுகிறது.

McDonald கடை

McDonald கடை

2008ல் Windsor அரண்மனையை வாங்கும் போது அதன் நிலபகுதியில் இருந்த ஒரு McDonald கடையையும் சேர்த்து ராணி எலிசபெத் வாங்கியுள்ளார்.

சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்

சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்

இது பிரிட்டன் அரச குடும்பத்தின் நான்கு தலைமுறையினருக்கான பர்தசனல் வீடாகவும், நோர்போக்கில் உள்ள ஆங்கிலேய கவுண்டியில் அமைந்துள்ளது.

இந்த அரண்மனை சுமார் 20,000 ஏக்கர் பசுமையான வயல்களாலும் காடுகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த வீடு 1771 இல் கட்டிடக் கலைஞர் கார்னிஷ் ஹென்லி என்பவரால் கட்டப்பட்டது.

 

பால்மோரல் கோட்டை

பால்மோரல் கோட்டை

விக்டோரியா மகாராணி மற்றும் இளவரசர் ஆல்பர்ட் ஆகியோருக்காக 1852 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்தப் பால்மோரல் கோட்டையானது 1856 ஆம் ஆண்டு வில்லியம் ஸ்மித் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.

இந்தக் கோட்டையானது ஸ்காட்லாந்தில் உள்ள 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சில அற்புதமான கட்டிடக்கலைகளைக் கொண்டுள்ளது.

 

பக்கிங்ஹாம் அரண்மனை

பக்கிங்ஹாம் அரண்மனை

830,000 சதுர அடி தளம் மற்றும் 775 அறைகள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனை இன்றும் உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடாகா கருதப்படுகிறது. இது பிரிட்டின் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

இந்த அரண்மனையில் 19 அரசு அறைகள், 188 பணியாளர்கள் படுக்கையறைகள், 78 குளியலறைகள், 52 அரச விருந்தினர் அறைகள் மற்றும் 92 அலுவலகங்கள், அற்புதமான ஓவியங்கள் மற்றும் தனித்துவமான கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட முக்கிய அறைகள் உள்ளன.

 

விண்ட்சர் கோட்டை

விண்ட்சர் கோட்டை

ராணியின் இரண்டாவது உத்தியோகபூர்வ இல்லமான வின்ட்சர் கோட்டை 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. விண்ட்சர் கோட்டை ஜார்ஜிய மற்றும் விக்டோரியன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் அரண்மனைகளின் உட்புறத்தில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு தளபாடங்கள் உள்ளன.

வின்ட்சர் கோட்டை பெர்க்ஷயரின் கவுண்டியில் அமைந்துள்ளது மற்றும் ராணி தனது வார இறுதி நாட்களை இங்குச் செலவிடுகிறார்.

 

 ஹோலிரூட் ஹவுஸ்

ஹோலிரூட் ஹவுஸ்

எலிசபெத் ராணியின் மூன்றாவது உத்தியோகபூர்வ இல்லம் தான் இந்த ஹோலிரூட் இல்லம், அரசு குடும்பத்தினரின் விருந்தினர்கள் மற்றும் விழாக்களுக்கான பிரதான இடமாகும். இந்த அரண்மனை 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

அரண்மனை அரச குடும்ப உறுப்பினர்கள் தங்கும் நாட்களைத் தவிர, ஆண்டு முழுவதும் மக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

 

ஹில்ஸ்பரோ கோட்டை

ஹில்ஸ்பரோ கோட்டை

வடக்கு தீவிற்கு அடிக்கடி வருகை தரும் அரச குடும்பத்தின் முக்கிய வசிப்பிடமாக விளங்குவது இந்த ஹில்ஸ்பரோ கோட்டை. இது லார்ட் ஹில்ஸ்பரோவால் கட்டப்பட்டது மற்றும் 1797 இல் R.F பிரெட்டிங்ஹாம் ஆல் கட்டி முடிக்கப்பட்டது.

பென்ட்லி ஸ்டேட் லிமோசின்

பென்ட்லி ஸ்டேட் லிமோசின்

எலிசபெத் ராணியின் அதிகாரப்பூர்வ அரசு காராக விளங்குவது பிரிட்டன் நாட்டின் பிரபலமான பிராண்டாக விளங்குவது பென்ட்லி ஸ்டேட் லிமோசின், இது 2002 இல் அவரது பொன்விழாவிற்குப் பரிசாக வழங்கப்பட்டது.

1984 ஜாகுவார் சலூன்

1984 ஜாகுவார் சலூன்

எலிசபெத் ராணியின் பிரத்யேக சேகரிப்புகளில் 1984 ஜாகுவார் டெய்ம்லர் டபுள் சிக்ஸ் லாங்-வீல்பேஸ் சலூன் காரும் அடங்கும், இது குறிப்பாக 1984 ஆம் ஆண்டில் அவரது வின்ட்சர் தோட்டங்களைச் சுற்றவும், ராணி ஓட்டுவதற்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது.

ரேஞ்ச் ரோவர்

ரேஞ்ச் ரோவர்

2010 ஆம் ஆண்டு ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சியின் போது ராணி எலிசபெத் அவரே ஓட்டிக் கொண்டிருந்த கார் இதுவாகும், மேலும் பானட்டில் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட கோர்கி சிலை உள்ளது.

இந்த ரேஞ்ச் ரோவர் கார் இரட்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 இன்ஜின், 4 வீல் டிரைவ், 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் SUV காராகும். இதன் விலை 400,000 டாலர்.

 

நகை சேகரிப்பு

நகை சேகரிப்பு

பெண்கள் என்றால் நகை மீது அதிகப்படியான ஆசை இருக்கும், இதுவும் உலகிலேயே பணம் பலம், ஆட்சி பலம் அதிகம் கொண்ட ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்-யிடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் உள்ளது.

 Granny's tiara கிரீடம்

Granny's tiara கிரீடம்

புகழ்பெற்ற கிரீட நகைகளைக் கொண்ட இந்தச் சேகரிப்பில் அவரது அரச கிரீடம் "தி கேர்ள்ஸ் ஆஃப் கிரேட் பிரிட்டன் தலைப்பாகை" அடங்கும், இது ராணியின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றாகும்.

வைரம் வைரம்..

வைரம் வைரம்..

இந்த இணைப்பில் 22.48 காரட் கொண்ட தனித்துவமான துளி வடிவ வைர நெக்லஸ், தென்னாப்பிரிக்க நெக்லஸ் மற்றும் வளையல், வைர காதணிகள், 200 ஆண்டுகளுக்கும் மேலான ரத்தினக் கற்கள், 23.6 காரட் வெட்டப்படாத டான்சானியாவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருப்பு நிற ஸ்னஃ பாக்ஸ் மற்றும் மார்வெல் பாக்ஸ் ஆகியவை அடங்கும். வைரங்களுடன்.

பரிசுகள்

பரிசுகள்

எலிதபெத் ராணிக்கு வழங்கப்பட்ட சில முக்கியமான பரிசுகளில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள விளாடமிர் தலைப்பாகை, 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இளவரசர் ஆல்பர்ட் சபையர் ப்ரூச் மற்றும் கிட்டத்தட்ட 50 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள குல்லினன் நகைகள் ஆகியவை அடங்கும்.

 கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம்

உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். இது இந்தியாவிற்குச் சொந்தமானது. ஆனால் இங்கு இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இந்த வைரம் இருக்கிறது. 1849 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் அளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு இந்தியா உள்பட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. தற்போது அந்தக் கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நிலத்தடியில் லாக்கர்

நிலத்தடியில் லாக்கர்

மேலும் இந்த நகைகள் அனைத்தும் பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு பகுதியில் பாதுகாப்பான நிலத்தடியில் லாக்கரில் வைக்கப்படுகின்றன.

ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..! ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Expensive Things Owned By Majesty Queen Elizabeth II; Dies at 96

the 16 most Expensive Things Owned By Majesty britain's Queen Elizabeth II from HMY Britannia ship to castle, jewels, cars, palace, land, swans, etc
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X