No Nut டிரென்ட் உடன் துவங்கிய நவம்பர் இப்படி ஆகிடுச்சே.. மக்கள் கதறல்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆண்டின் நவம்பர் மாதம் இணையம் முழுவதும் நோ நட் நவம்பர் (NNN) என்ற டிரெண்ட் உடன் துவங்கி தற்போது நிலைமை மொத்தமாக மாறி மக்கள் உச்சக்கட்ட சோகத்தில் உள்ளனர்.

 

நோ நட் நவம்பர் (NNN) என்பது ஆண்களுக்கிடையேயான ஒரு விநோதமான சவாலாகும். நவம்பர் மாதம் முழுவதும் எவ்விதமான பாலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தான் இந்தச் சேலேன்ஞ்ச். அதாவது ஒரு மாதத்திற்கு உடலுறவு இல்லை மற்றும் சுய இன்பம் இல்லை. இந்த டிரெண்ட் 2010 உருவானதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

ஆனால் நவம்பர் மாத துவக்கம் முதல் நிறுவனங்களின் தொடர்ந்த பணிநீக்கத்தால் No Nut November என்பது மாறி தற்போது No Jobs November ஆக மாறியுள்ளது என மக்கள் புலம்பத் துவங்கியுள்ளனர்.

சன் டிவி கலாநிதி மாறன் வாங்கிய பிரைவேட் ஜெட்.. விலை என்ன தெரியுமா..? சன் டிவி கலாநிதி மாறன் வாங்கிய பிரைவேட் ஜெட்.. விலை என்ன தெரியுமா..?

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

நவம்பர் மாத 16 நாட்களில் மட்டும் மெட்டா, அமேசான், டிவிட்டர் தனது உலகளவில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. layoffs.fyi என்னும் டேட்டா அக்ரிகேட்டர் நிறுவனத்தின் தரவுகள் படி சுமார் 37,866 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறுகிறது.

மெட்டா

மெட்டா

இதில் அதிகப்படியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது என்றால் அது கட்டாயம் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா தான் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி சுமார் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

டிவிட்டர்
 

டிவிட்டர்

இதேபோல் நவம்பர் 4 ஆம் தேதி டிவிட்டர் 3700 ஊழியர்களையும், நவம்பர் 16ஆம் தேதி அமேசான் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதோடு டிவிட்டர் தனது ஒப்பந்த ஊழியர்கள் பிரிவில் சுமார் 4400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மெட்டா, அமேசான், டிவிட்டர் மட்டும் அல்லாமல் பல முன்னணி டிஜிட்டல் மற்றும் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இந்த நவம்பர் மாதம் அதிகளவில் பணிநீக்கம் செய்தது டெக் மற்றும் டெக் சார்ந்த நிறுவனங்கள் தான், இதைத் தொடர்ந்து பிரபலமான முதலீட்டாளர்களாக இருக்கும் Ray Dalio இந்தப் பணிநீக்கம் மூலம் டெக் நிறுவனங்கள் பபுளில் இருந்தது விளங்குகிறது.

லாபம்

லாபம்

மேலும் அவர் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் லாபத்தில் இயங்காமல் உள்ளது, பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் பெரிய தொகையைக் கடனாக வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது, அல்லது வென்சர் கேப்பிடல்-ஐ நம்பி இயங்கி வருகிறது.

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் உபரி நிதி குறைந்த காரணத்தால் தற்போது பிரம்மாண்டமான டெக் நிறுவனங்களின் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலீட்டாளர்

முதலீட்டாளர்

ஆனால் உண்மையில் இன்று முன்னணி மற்றும் பிரபலமான முதலீட்டாளர், வெற்றிபெற்ற முதலீட்டாளராகக் கருதப்படும் பல முதலீட்டாளர்கள் டெக் நிறுவனத்தில் முதலீடு செய்து தான் அதிகப்படியான பணத்தைச் சம்பாதித்தனர் என்றால் மிகையில்லை.

பணிநீக்கம் - பணப்புழக்கம்

பணிநீக்கம் - பணப்புழக்கம்

தற்போது அதிகப்படியான பணிநீக்கத்திற்கு முக்கியக் காரணம் வட்டி உயர்வால் பணப்புழக்கம் குறைந்தது தான் என Ray Dalio உறுதியாகக் கூறுகிறார். ஏற்கனவே பல முன்னணி டெக் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது, ஆனால் கொரோனாவுக்குப் பின்பு டிமாண்ட் பெரிய அளவில் குறைந்தது.

கூடுதலான ஊழியர்கள்

கூடுதலான ஊழியர்கள்

இதனால் நிறுவனத்தில் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகப் பல நிறுவனங்கள் கூறிய நிலையில், தற்போது பணப் புழக்கம் குறைந்த காரணத்தால் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளனர்.

No Nut November டூ No Jobs November

No Nut November டூ No Jobs November

No Nut November என்று விளையாட்டாகத் துவங்கிய நவம்பர் மாதம் தற்போது No Jobs November ஆக மாறியது மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, பணிநீக்கம் செய்வதால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.

அடுத்தது என்ன..?

அடுத்தது என்ன..?

பிரிட்டன் நாட்டின் நிதிமையச்சரான ஜெர்மி ஹன்ட் வியாழக்கிழமை பேசுகையில், பிரிட்டன் ஏற்கனவே ரெசிஷனில் தான் உள்ளது என அறிவித்தார். இதுவரையில் எந்தொரு நாடும் ரெசிஷனுக்குச் சென்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்தடுத்து நிறுவனங்கள் ரெசிஷன் குறித்து அறிவிப்பை வெளியிடலாம். மீதமுள்ள நவம்பர் மாதம் ரெசிஷன் அச்சத்தில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது

முகேஷ் அம்பானி-யை காப்பி அடிக்கும் கௌதம் அதானி..! எதற்காக..?! முகேஷ் அம்பானி-யை காப்பி அடிக்கும் கௌதம் அதானி..! எதற்காக..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook, Amazon, Twitter layoff 38000 employees around world turned No Jobs November

Facebook, Amazon, Twitter layoff 38000 employees around world turned No Jobs in November
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X