இன்று உலக முழுவதும் மெசேஜ் சேவைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். வாட்ஸ்அப் வந்த பின்னர் டெலிகாம் சேவை நிறுவனங்கள் கொடுக்கும் மெசேஜிங் சேவையை யாரும் பயன்படுத்துவதே இல்லை என்று சொன்னால் மிகையில்லை.
பேஸ்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் தற்போது வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகிறது.
நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்கு தடை விதித்த ரஷ்ய அரசு!

மார்க் சக்கர்பெர்க்
எங்களது கனவு, கொள்கை அனைத்தையும் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா சீர்குலைத்துள்ளது என வாட்ஸ்அப்-ன் முன்னாள் தலைமை வர்த்தக அதிகாரியான நீரஜ் அரோரா டிவிட்டரில் புலம்பியுள்ளார். இது மட்டும் அல்லாமல் பல உண்மைகளையும் உடைத்துள்ளார்.

நீரஜ் அரோரா டிவீட்
2014-ல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த போதுதான் பேஸ்புக்கிற்கு வாட்ஸ்அப்-ஐ $22 பில்லியன் விற்பனையைப் பேச்சுவார்த்தை நடத்த உதவினேன்.
ஆனால் இன்று நான் வருந்துகிறேன் என நீரஜ் அரோரா டிவீட் செய்துள்ளார்.

தவறு எங்கே நடந்தது
வாட்ஸ்அப் 2009 இல் ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரால் நிறுவப்பட்ட, 2 ஆண்டுகளில் (2011), நான் தலைமை வணிக அதிகாரியாகக் குழுவில் சேர்ந்தேன்.
இப்படியிருக்கையில் தான் 2012/13 இல், மார்க் சக்கர்பெர்க் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தால் கையகப்படுத்தல் குறித்து எங்களை அணுகியது.
முதலில் நாங்கள் மறுத்துவிட்டோம். இதன் பின்பு வேகமாக வளர முடிவு செய்தோம்.

விடாத பேஸ்புக்
ஆனால் 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் புதிய திட்டத்துடன் மீண்டும் எங்களை அணுகியது. இந்த முரை மொத்தமாகக் கைபற்றாமல் ஒரு கூட்டணி முறையில் இயங்கும் சலுகை. இதில் சில முக்கியமான கண்டிஷன்களையும் முன்வைத்தோம்
1. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனுக்கான முழு ஆதரவு
2. விளம்பரங்கள் தடை (எப்போதும்)
3. தயாரிப்பு முடிவுகளில் முழுமையான சுதந்திரம்
4. ஜான் கோம்-க்கு பேஸ்புக் நிர்வாகக் குழுவில் இடம்.
5. அமெரிக்க மவுண்டன் வியூவில் எங்கள் சொந்த அலுவலகம்

பணம்..?
இந்தக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பது முக்கியமான கேள்வியாக இருந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வாடிக்கையாளர்களிடம் $1 வசூலிப்பதன் மூலம் வாட்ஸ்அப் பணம் சம்பாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேஸ்புக் எங்களுடையை அனைத்து கட்டுப்பாடுகளையும் ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்டது.

பயனர் தரவுகள்
மேலும் நீரஜ் அரோரா கூறுகையில் நாங்கள் கையகப்படுத்தல் மூலம் பேசத் தொடங்கியபோது, எங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக்கினோம்:
- பயனர் தரவுகளைச் சுரண்ட கூடாது
- விளம்பரங்கள் இல்லை (எப்போதும்)
- கிராஸ் பிளாட்பார்ம் கண்காணிப்பு இல்லை

22 பில்லியன் டாலர் டீல்
பேஸ்புக் மற்றும் அவர்களின் நிர்வாகம் ஒப்புக்கொண்டது மற்றும் அவர்கள் எங்கள் பணியை நம்புவதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் சொன்னப்படி எதுவும் நடக்கவில்லை. 2014ல் பேஸ்புக் 22 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா
எல்லாம் சரியாக இருக்கிறது என நினைத்த போது 2017 மற்றும் 2018 இல், பேஸ்புக்-கில் வித்தியாசமாக நடக்கத் துவங்கியது. 2018 இல், பேஸ்புக் / கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழலின் விவரங்கள் வெளிவந்தவுடன், வாட்ஸ்அப் நிறுவனர் பிரையன் ஆக்டன் பேஸ்புக்-ஐ டெலிட் செய்யும் நேரம் வந்துவிட்டது என டிவீட் செய்தார் என நீரஜ் அரோரா தெரிவித்தார்.

2வது பெரிய தளம்
இன்று மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப் 2வது பெரிய தளமாக இருக்கிறது. முதலில் பேஸ்புக் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். பேஸ்புக் ஒரு அரக்கனாக மாறும் என்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இன்று வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகிறது என நீரஜ் அரோரா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.