டிஜிட்டல் பணத்தை உருவாக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்.. பெரிய நிறுவனங்களின் ஆட்டம் ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் நிதியியல் சந்தை இனி வரும் காலத்தில் கிரிப்டோகரன்சி, பிளாக்செயின், NFT வாயிலாகத் தான் இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக், அந்நாட்டு நாணயங்களை அச்சிடும் ராயல் மின்ட் அமைப்பைக் கோடைக் காலத்திற்குள் NFT உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட்டார். இது உலகம் முழுவதும் பேசப்பட்ட நிலையில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியுள்ளது.

இதில் முக்கியமாகப் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா -வின் அறிவிப்பு பல முன்னணி டெக் நிறுவனங்களுக்கு வியப்பை அளித்துள்ளது.

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்! 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா சில வருடங்களுக்கு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் வரையிலான குளோபல் கிரிப்டோகரன்சி திட்டத்தைக் கையில் எடுத்தது. முதலில் Libra என்ற பெயருடன் கிரிப்டோகரன்சி உருவாக்கும் பணியைத் துவங்கியது

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

ஆனால் சில நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்கள் பிரச்சனையால் அதை DIEM என்று பெயர் மாற்றியது. ஆனால் உலகின் பல முன்னணி நிதியியல் கட்டுப்பாட்டு ஆணையங்கள் தடை விதித்த காரணத்தால் இத்திட்டத்தை மொத்தமாகக் கைவிட்டது.

டிஜிட்டல் டோக்கன்
 

டிஜிட்டல் டோக்கன்

இந்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்த டோக்கன்கள் வீடியோ கேம்களில் பயன்படுத்தும் ஒன்று. Fortnite, Roblox போன்ற பிரபலமான கேம்களில் இதுபோன்ற டிஜிட்டல் டோக்கன்களைப் பயன்படுத்துவது வழக்கம்.

Zuck Bucks திட்டம்

Zuck Bucks திட்டம்

இதைத் தற்போது மெட்டா நிறுவனம் தனது தளத்தில் இருக்கும் கிரியேட்டர்கள் மற்றும் influencers-க்கு ஆன்லைன் வாடிக்கையாளர்கள் ஈர்ப்பது பொறுத்து பரிசாக வழங்கப்பட முடிவு செய்துள்ளது. இதற்காக "Zuck Bucks" பெயரில் டிஜிட்டல் பணத்தை டிஜிட்டல் டோக்கன்-களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம் தனது சமுகவலைதளத்தில் செய்யப்படும் விளம்பரத்தின் வாயிலாக மட்டுமே வருமானத்தை ஈட்டும் நிலையில் இருந்து மாற வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காகப் பல திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது, இதில் ஒன்று தான் "Zuck Bucks" என்ற டிஜிட்டல் பணத்தை உருவாக்கும் திட்டம்.

 ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

பேஸ்புக் நிறுவனத்தைப் போலவே உலகின் மிகப்பெரிய காஃபி ஷாப் பிராண்டான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹோவர்ட் ஷூல்ட்ஸ் ஊழியர்கள் உடனான கூட்டத்தில் 2022க்குள் ஸ்டார்பக்ஸ் NFT பிரிவுக்குள் நுழையும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook parent Meta is creating digital money; New project named Zuck Bucks

Facebook parent Meta is creating digital money; New project named Zuck Bucks டிஜிட்டல் பணத்தை உருவாக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்.. பெரிய நிறுவனங்களின் ஆட்டம் ஆரம்பம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X