ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் எப்போதும் இல்லாத வகையில் இந்திய நிறுவனங்கள் மீதும், இந்திய வாடிக்கையாளர்கள் மீதும் தனிப்பட்ட ஈர்ப்பை பெற்றுள்ளது. இந்திய இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அமெரிக்க வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகம். இது மட்டும் தான் காரணமாக என்றால் இல்லை, இதையும் தாண்டி மிகப்பெரிய காரணம் உண்டு.

பேஸ்புக் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல பில்லியன் டாலரை முதலீடு செய்த நிலையில் தற்போது, இந்தியாவில் பழமையான மியூசிக் லேபிள் நிறுவனமான சரிகம நிறுவனத்தில் முதலீடு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பேஸ்புக் சமீப காலமாக தொடர்ந்து இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் இந்தியாவில் இந்நிறுவனத்தின் திட்டம் என்ன என்பது முழுமையாக தெரியவில்லை.

ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. !ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. !

பேஸ்புக் - சரிகம

பேஸ்புக் - சரிகம

உலகின் மிகப்பெரிய சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் புதன்கிழமை மிகவும் ரகசியமாக வெளியிடப்படாத தொகைக்கு சரிகம உடன் global licensing ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் யாருக்கு என்ன லாபம் தெரியுமா..?

இந்த ஒப்பந்தம் மூலம் சரிகம உரிமம் வைத்துள்ள பாடல்களை கொண்ட வீடியோக்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்-ல் பயன்படுத்த முடியும். இதற்கு முன்பு சரிகம உரிமம் கொண்ட பாடல்கள் கொண்ட வீடியோ வந்தால் அதை பேஸ்புக் நிர்வாகம் பிளாக் செய்யும். இந்த ஒப்பந்தம் மூலம் அந்த பிரச்சனை இல்லை.

ஸ்பாடிபை

ஸ்பாடிபை

சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு மியூசிக் பிளேயர் நிறுவனமான ஸ்பாடிபை, தனது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்தும் விதமாக சரிகம நிறுவனத்துடன் ஸ்பாடிபை licensing partnership ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது பேஸ்புக் சரிகம உடன் கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக்

பேஸ்புக்

ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் நிறுவனத்தில் குறைந்தது 2.6 பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இந்த ஒப்பந்தம் மூலம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ, ஸ்டோரி, இதர வீடியோ ஆகியவற்றில் சரிகம பாடல்களை எவ்விதமாக தடையுமின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தங்களது profile வீடியோக்களிலும் சரிகம பாடல்களை பயன்படுத்த முடியும்.

 

சரிகம

சரிகம

சரிகம சுமார் 25 மொழிகளில் பல்வேறு இசை வகைகளில் சுமார் 1,00,000 லட்சத்திற்கும் அதிகமாக பாடல்களை வைத்துள்ளது. மேலும் இந்திய இசை வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சேவையில் சரிகம முக்கிய இடத்தில் மட்டும் அல்லாமல் முன்னோடியாகவும் சரிகம உள்ளது.

50% சந்தை

50% சந்தை

சரிகம இதற்கு முன்பு The Gramophone Co. of India Ltd என்று அழைக்கப்பட்டது, இந்நிறுவனத்திடம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பாடல்களில் 50 சதவீதம் உரிமை கொண்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவிலேயே அதிக பாடல்களின் உரிமை வைத்துள்ள நிறுவனமும் இதுதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook signs global licensing deal with music label Saregama

Social media giant Facebook on Wednesday said it has signed a global licensing deal with India’s oldest music label Saregama. The partnership with Facebook comes soon after Swedish audio streaming service Spotify signed a licensing partnership with Saregama for Indian users. The deal terms between Facebook and Saregama were undisclosed.
Story first published: Thursday, June 4, 2020, 14:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X