உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் சீனாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த லைவ் காமெர்ஸ் சேவையை உலக நாடுகளில் அறிமுகம் செய்து மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு லைவ் ஷாப்பிங் என்ற பெயரில் அறிமுகம் செய்தது.
இந்தச் சேவை பெரிய அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத நிலையிலும், விரும்பாத நிலையிலும் பேஸ்புக் தனது லைவ் ஷாப்பிங் சேவையை வருகிற அக்டோபர் 1, 2022 முதல் நிறுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரீல்ஸ் சேவை
இதற்கு மாறாகப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரீல்ஸ் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்தும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த உள்ளதாகப் பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதை முக்கிய வர்த்தகம் மற்றும் விளம்பர தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா (Meta) நிர்வாகம்.

அக்டோபர் 1
அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின்பும் லைவ் ஷாப்பிங் செய்ய விரும்புவோர் போஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில் பொருட்களின் லிங்க்-ஐ டேக் செய்து விளம்பரம் செய்ய முடியும், இதிலும் லைவ் காமர்ஸ் போலவே வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் எனத் தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது பேஸ்புக்.

லைவ் காமர்ஸ்
சரி லைவ் காமர்ஸ் என்றால் என்ன..? லைவ் காமர்ஸ் சீனாவில் எப்படி இயங்குகிறது..? ஏன் பேஸ்புக் இந்தப் பிரிவில் வெற்றி அடைய முடியவில்லை. சீனாவில் லைவ் காமர்ஸ் வர்த்தகம் 2022 ஆம் ஆண்டு முடிவில் 3.5 டிரில்லியன் யுவான் ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி என்ன இதில் ஸ்பெஷல்.

Taobao ஷாப்பிங்
லைப் காமர்ஸ் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் சேவை தளமான சீனாவின் Taobao மற்றும் இதர பல ஈகாமர்ஸ் நிறுவனங்கள், ஷாட் வீடியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் லைவ் ஸ்ட்ரீமிங் வாயிலாகப் பொருட்கள் குறித்து விபரத்தையும் அதன் பயன்பாட்டையும் விளக்கி அதே நேரத்தில் அதிகப்படியான தள்ளுபடியில் அப்பொருட்களை வாங்கவும் வாய்ப்பு அளிக்கிறது, இதுதான் லைவ் காமர்ஸ்.

தடாலடி வளர்ச்சி
இத்தகையை விற்பனை முறை மூலம் Taobao தளத்தில் இருக்கும் நிறுவனங்கள் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று பெரிய அளவிலான வருமானத்தைப் பெற்றதால், சீனாவில் இந்த லைவ் காமர்ஸ் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

பல பிரிவு நிறுவனங்கள்
இந்த லைவ் காமர்ஸ் முறை சீனாவில் பெரிய அளவிலான வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஷாட் வீடியோ நிறுவனங்கள், சமூகவலைத்தள நிறுவனங்கள் ஆகியோர் social media influencer, நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், பிரபலங்கள் எனப் பலருடன் நிறுவனங்கள் கூட்டணி வைத்துப் பொருட்களை லைவ் காமர்ஸ் தேவை அளிக்கும் நிறுவனத்தில் விற்பனை செய்து வருகிறது.

அலிபாபா சிங்கிள் டே விற்பனை
2020ல் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா சிங்கிள் டே விற்பனை துவங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட Taobao லைவ் விற்பனையில் சுமார் 7.5 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
இதேபோன்ற சேவைக்காக வால்மார்ட், டிக்டாக் நிறுவனம் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்திற்காகக் கூட்டணி வைத்துள்ளது. இந்தியாவில் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட், ஷார்சேட்-ன் மோஜ் உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது சீனா-வை தவிரப் பிற நாடுகளில் பிரபலமாகவில்லை என்பது தான் சோகமான விஷயம்.