Fact Check: ஆதார் கார்டு வைத்திருந்தால் 4.78 லட்சம் கடன்.. மத்திய அரசு அறிவிப்பா..? உண்மை இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை கட்டாயம் உறுதி செய்துகொண்டு, யாருடைய பேச்சையும் கேட்காமல் நேரடியாக ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.

இது 10 ரூபாய் முதலீடாக இருந்தாலும், 10 கோடி முதலீடாக இருந்தாலும் சரி. டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மக்களிடம் நிதி மோசடி செய்யும் கும்பல் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் நம்பிவிடக் கூடாது.

குறிப்பாகத் தலைவர்கள் புகைப்படம், முன்னணி பிராண்டுகளின் லோகோ கொண்டு இலவசம், கடன், வருமானம் ஈட்டும் வாய்ப்பு போன்ற போஸ்ட் அல்லது செய்தி வந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக் கிளிக் செய்யுங்கள்.

கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.! கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.!

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

இந்த நிலையில் மோடி அரசு ஆதார் கார்டு வைத்திருந்தால் 4.78 லட்சம் கடன் கொடுப்பதாகப் போலி விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு தரப்பில் Press Information Bureau (PIB)-வின் Fact Check பிரிவு உண்மையை மக்களுக்கு விளக்கியுள்ளது.

மோசடி திட்டம்

மோசடி திட்டம்

மத்திய தகவல் மற்றும் பிராட்காஸ்டிக் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் Press Information Bureau (PIB)-வின் Fact Check பிரிவு டிவிட்டர் பதிவில் இந்த மோசடி திட்டம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

ரூ.4.78 லட்சம் கோடி கடன்

ரூ.4.78 லட்சம் கோடி கடன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 4.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்க உள்ளதாகப் போலி தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கிறது. இது உண்மை இல்லை Fake என PIB-யின் Fact Check பிரிவு டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

PIB-யின் Fact Check பிரிவு

PIB-யின் Fact Check பிரிவு

மேலும் மத்திய அரசு ஆதார் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 4.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்க உள்ளதாக வரும் செய்திகளை யாரும் பகிர வேண்டாம் என மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து PIB-யின் Fact Check பிரிவு. இதேபோல் யாரிடமும் தங்களின் நிதியியல் மற்றும் வங்கி தகவல்களை அளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

PIB-யின் Fact Check பிரிவின் கண்காணிப்பு படி இத்தகை பதிவுகளும், செய்திகளும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தது கண்டுபிடித்துள்ளது. மேலும் இதுபோன்ற போலி செய்திகள் குறித்து அவ்வப்போது PIB மக்களுக்கு டிவிட்டர் மற்றும் இதர சமுக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்தும், விழிப்புணர்வு அளித்தும் வருகிறது.

டிஜிட்டல் கடன் சேவை

டிஜிட்டல் கடன் சேவை

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் கடன் சேவை பெயரில் பெரும் மோசடிகள் நடந்து வருகிறது. கடன் மோசடி தாண்டி மக்களைப் பல வகையில் மிரட்டி அதிகப் பணத்தை வசூலித்து வருகிறது. மோசடி செய்யும் பெரும்பாலான டிஜிட்டல் கடன் செயலிகள் சீன நிறுவனங்களையும், சீன நாட்டவர்களையும் தொடர்புடையதாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fact Check: PIB clarified Modi Govt giving Rs 4.78 lakh loan to Aadhaar Card holders is Fake information

Fact Check: PIB clarified Modi Govt giving Rs 4.78 lakh loan to Aadhaar Card holders is Fake information
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X