ஜாய் ஆலுக்காஸ் ஓனர் இறந்துட்டாரா..? உண்மை அல்ல என ஜாய் ஆலுக்காஸ் விளக்கம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோன வைரஸை விட, இந்த வாட்ஸப் அலப்பறைகளே பாதி பேரை கூடுதலாக பீதி அடையச் செய்து கொண்டே இருக்கிறது.

ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் இறந்துட்டாரா..? ஜாய் ஆலுக்காஸ் விளக்கம்!
 

இப்போது வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் இந்தியாவின் புகழ் பெற்ற நகைக் கடைகளில் ஒன்றான, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய் (உரிமையாளர் பெயரும் ஜாய் ஆலுக்காஸ் தான்), ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து இறந்துவிட்டார் எனச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இது முற்றிலும் தவறான செய்தி என ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை நிறுவனம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

இறந்தது யார்?

இறந்தது யார்?

ஜாய் ஆரக்கல் (Joy Arakkal) என்பவரும், கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தான் கடந்த ஏப்ரல் 23, 2020 அன்று மாரடைப்பால் இறந்து இருக்கிறார். இதை கல்ஃப் டைம்ஸ், மனோரமா ஆன்லைன், டேக்கன் ஹெரால்ட், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் உறுதி செய்து இருக்கின்றன. இவரும் கேரளாவில் வயநாடு பகுதியில் ஆரக்கல் அரண்மனையால் பிரபலமாக பலருக்கும் தெரிந்தவர்.

ஜாய் ஆரக்கல் பிசினஸ்

ஜாய் ஆரக்கல் பிசினஸ்

ஜாய் ஆரக்கலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னோவா குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். இந்த கம்பெனி பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வர்த்தகம் மற்றும் ரீ-ப்ராசசிங் வேலைகளைச் செய்து வருகிறதாம். இந்த இன்னோவா கம்பெனிக்கு சொந்தமாக சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் அலுவலகங்கள் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம் இருக்கிறதாம்.

தவறு
 

தவறு

ஜாய் ஆரக்கல் (இன்னோவா குழும கம்பெனி) இறந்ததைத் தான், ஜாய் ஆலுக்காஸ் கம்பெனியின் ஓனர் ஜாய் ஆலுக்காஸ் இறந்ததாக, தவறான செய்திகள் பரவிக் கொண்டு இருக்கிறது. இதற்கு ஜாய் ஆலுக்காஸ் தரப்பில் இருந்து தெளிவாக விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்.

ஜாய் ஆலுக்காஸ் விளக்கம்

ஜாய் ஆலுக்காஸ் விளக்கம்

ஜாய் ஆலுக்காஸ் கம்பெனியின் உரிமையாளர் இறந்துவிட்டதாக வரும் செய்தி தவறு. ஜாய் ஆலுக்காஸ் நிறுவன உரிமையாளர் பாதுகாப்பாகவும் நல்ல உடல் நலத்தோடும் இருக்கிறார். ஜாய் ஆரக்கலுக்கும், ஜாய் ஆலுக்காஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜாய் ஆரக்கலின் இறப்புக்கு, ஜாய் ஆலுக்காஸ் தன் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது என விளக்கம் கொடுத்து இருக்கிறது ஜாய் ஆலுக்காஸ்.

ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை

ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை

கடந்த 1987-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ஜாய் ஆலுக்காஸ். இந்த நகைக் கடையை ஆலுக்காஸ் வர்க்கீஸ் ஜாய் (ஜாய் ஆலுக்காஸ்) என்பவர் தொடங்கினார். இதன் தலைமை அலுவலகம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலும் துபாயிலும் இருக்கிறதாம். ஜாய் ஆலுக்காஸ் நகைகள், வெளிநாட்டு பணப் பரிமாற்றம், போன்ற வியாபாரங்களைச் செய்து கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fake news joy alukkas owner joy alukkasdead due to corona in UAE

The south indian famous joy alukkas owner alukkas vaghese joy died due to corona in UAE is a fake news. Joy alukkas jewellery company explained it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X