வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்க.. உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதில் பல பாதிப்புகளும், பிரச்சனைகளும் உடன் வந்துகொண்டே இருக்கிறது.

தற்போது முக்கியமான பிரச்சனை என்னவென்றால் உலகிலேயே அதிகப்படியான ஆண்ட்ராய்டு டிரோஜன் இருப்பது இந்தியாவில் தான் என்றும், இந்தியாவில் போலியான வாஸ்ட்அப் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் மக்களின் சேட் மெசேஜ் உட்படப் பல்வேறு தனிநபர் விபரங்கள் திருடப்பட்டு வருவதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

நீங்களும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா..?

ஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..! ஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..!

வாட்ஸ்அப் செயலி

வாட்ஸ்அப் செயலி

வாட்ஸ்அப் செயலி போலவே இருக்கும் குளோன் செய்யப்பட்ட, 3ஆம் தரப்பின் போலி வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். GB WhatsApp என்ற பெயரில் இருக்கும் இந்த வாட்ஸ்அப் பல தவறுகளைச் செய்து வருவதாகச் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET தெரிவித்துள்ளது.

ஆடியோ, வீடியோ திருட்டு

ஆடியோ, வீடியோ திருட்டு

இதுபோன்ற போலி மற்றும் பாதுகாப்பற்ற செயலிகள் மூலம் நீங்கள் பேசுவதை உங்களின் போனில் இருந்து ரெக்கார்டு செய்ய முடியும், இதேபோல் வீடியோவும் ரெக்கார்டு செய்ய முடியும் எனச் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET தெரிவித்துள்ளது. GB WhatsApp செயலி ப்ளே ஸ்டோரில் இல்லை, ஆனால் இணையத்தில் பல வழிகளில் இருந்து ஊடுருவி வருகிறது.

'Mozi' botnet

'Mozi' botnet

இதேபோல் உலகளவில் அதிகளவிலான ஜியோலொகேஷன் IoT பாட்-கள் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பாட்களின் பெயர் MOZI என்ற அழைக்கப்படுகிறது, 'Mozi' botnet ஆட்டோபைலட் முறையில் இயங்கும் தன்மை கொண்டது.

தனிநபர் திருட்டு

தனிநபர் திருட்டு

'Mozi' botnet உங்கள் பாஸ்வேர்டு, ஆடியோ, வீடியோ போன்ற பல விஷயங்களைத் திருட முடியும். இது முழுக்க முழுக்கத் தனிநபர் தகவல்களைத் திருடுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதால் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

மக்களே உஷார்

மக்களே உஷார்

முதலில் உங்கள் போனில் இருப்பது சரியான வாஸ்ட்அப் செயலி தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். GB WhatsApp செயலி பெயரில் அல்லது வேறு வாட்ஸ்அப் செயலிகளையோ வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்துவிட்டு போன் factory reset செய்துவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fake Whatsapp might spying indians; stealing Audio, video Alert!

Fake and cloned Whatsapp might spying indians; stealing Audio, video Alert!
Story first published: Saturday, October 8, 2022, 15:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X