கேரள விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை.. பலியானவர்களின் குடும்பத்தினர் கொடுத்த நிதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 18 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் விமான விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளனர்.

இதற்காக அவர்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீட்டு பணத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி இந்த பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஏன் இந்த இடத்தில் மருத்துவமனை கட்டினார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்... உங்களிடம் இருக்கா? உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்... உங்களிடம் இருக்கா?

விமான விபத்து

விமான விபத்து

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று துபாயில் இருந்து 190 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு டேப்லெட் ஓடுபாதையை கடந்து 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்ததில் விமானி மற்றும் துணை விமானி உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி

உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி

எனவே அந்த இரவு நேரத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பல உயிர்களை காப்பாற்றிய அந்த பகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அந்த பகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.

ரூ.50 லட்சம் செலவில் மருத்துவமனை
 

ரூ.50 லட்சம் செலவில் மருத்துவமனை

விபத்து நடந்த பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் வரை மருத்துவமனை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர்கள், ரு.50 லட்சம் செலவில் மருத்துவமனை கட்டுவதற்காக அனுமதி வாங்கியுள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 184 பேர் சேர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக 50 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள வசதிகள்

மருத்துவமனையில் உள்ள வசதிகள்

தற்போது அங்கு மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நோயாளிகள் வசதியுடன் கூடிய மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடம் உள்பட பல்வேறு வசதிகள் இந்த மருத்துவமனையில் இருக்கும் என கூறப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

விமான விபத்து நடந்த இரண்டாம் ஆண்டு நினைவாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த மருத்துவமனை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன் இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இழப்பீடு

இழப்பீடு

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் சமீபத்தில் கிடைத்தது என்பதும் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ரூ.7 லட்சம் முதல் ஒரு கோடி வரை இழப்பீடு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Families Of Air India Crash Victims To Build Hospital For Kerala Locals Who Helped In Rescue

Families Of Air India Crash Victims To Build Hospital For Kerala Locals Who Helped In Rescue | விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை.... பலியானவர்களின் குடும்பத்தினர்கள் தந்த நிதி!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X