100% அபராதம்! நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் காலத்தில், பணத்தை கையாள்வது கூட பயமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சூரத்தில் கீழே கிடந்த 2,000 ரூபாய் நோட்டைக் கூட யாரும் கையில் எடுக்கவில்லை.

 

மாறாக அதன் மீது கல்லை வைத்துவிட்டு, காவலர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். அந்த அளவுக்கு கொரோனா குறித்து, பயம் கலந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இந்த நல்ல விஷயத்தை பெரிய அளவில் செய்ய, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், FASTag தொடர்பாக ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறதாம்.

FASTag

FASTag

டோல் கேட்களில் மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளைக் குறைக்கத் தான் FASTag கொண்டு வந்தார்கள். ஆனால் மக்கள் FASTag வாங்கி வைத்துக் கொண்டு, கணக்கை ரீசார்ஜ் செய்யாமல் இருக்கிறார்கள். இப்போது எல்லோரும் கட்டாயம் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

100 % அபராதம்

100 % அபராதம்

அப்படி அரசு சொல்வது போல எல்லோரும் தங்கள் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், 100 % அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆம். ஒரு டோலை கடக்க 100 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது என்றால், FASTag-ல் பணம் இல்லாதவர்கள், 200 ரூபாய் செலுத்த வேண்டி இருக்குமாம்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
 

நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்

இந்த உத்தரவை கடந்த மே 15, 2020 அன்றே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பிறப்பித்து இருக்கிறார்களாம். இப்போது வரை FASTag இல்லாத வாகனங்கள் தான் இரண்டு மடங்கு டோல் கட்டணத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அமைச்சகத்தின் இந்த புதிய உத்தரவால், இனி FASTag-ஐ முறையாக ரீசார்ஜ் செய்யாதவர்களும், 2 மடங்கு டோல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவிக் கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், FASTag-ஐ முழுமையாக பயன்படுத்தி, ரொக்கம் வழியாக டோல் கட்டணம் செலுத்தப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ், ரொக்க பணம் மூலமாக பரவுவதை தடுக்க உதவும் எனச் சொல்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.

FASTag பயன் இல்லாமல் போய்விடுமே

FASTag பயன் இல்லாமல் போய்விடுமே

டோல்களில், மக்கள் ரொக்கத்தைக் கொடுத்து கட்டணம் செலுத்திக் கொண்டு இருந்தால், FASTag விதியை முழுமையாக பின்பற்றும் மக்கள் இடையூறுகளுக்கு ஆளாகிறார்கள். FASTag கொண்டு வந்ததே பயணத்தை விரைவு படுத்துவதற்கும், ரொக்க பணப் பரிவர்த்தனையை குறைப்பதற்கும் தானே..! அதுவே அடிபட்டு போகும் என்றால் பிறகு FASTag-ஆல் என்ன பயன்..? என்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FASTag: 100 percent penalty for drivers if there is no money in fastag

FASTag: 100 percent penalty for drivers if there is no money in the bank account linked to the FASTag. Simply, drivers have to pay double toll tax if the FASTag linked bank account is having insufficient money .
Story first published: Monday, May 25, 2020, 22:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X