ரெசிஷன் கன்பார்மா.. இனி நம்ம வேலையெல்லாம் என்னவாகும்.. பெட் முடிவுக்கு எல்லை தான் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினரும் ரெசிஷன் வரலாம் என கூறி வருகின்றனர்.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு பணவீக்கம் என்பது வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தினை எட்டி வருகின்றது. இது பணவீக்கத்தினை குறைக்கும் விதமாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ச்சியாக பல முறை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.

தங்கம் விலை 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து 3 நாள் சரிவு.. மக்கள் குஷி..! தங்கம் விலை 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து 3 நாள் சரிவு.. மக்கள் குஷி..!

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் இருந்த நிலையில், இது தற்போது ரஷ்யா உக்ரைன் இடையே மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளிலும் பணவீக்கம் என்பது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது.

பணவீக்கம் சரிவு

பணவீக்கம் சரிவு

ஏற்கனவே விலை அதிகரிப்பு இருந்து வரும் நிலையில்,வட்டி அதிகரிப்பின் காரணமாக இன்னும் கூடுதலாக வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் செலவு குறைந்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு முறை வட்டி அதிகரித்தும் இதுவரையில், அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்ததாக தெரியவில்லை.

அடுத்த ஆண்டிலும் தொடரலாம்

அடுத்த ஆண்டிலும் தொடரலாம்

நடப்பு ஆண்டிலேயே 4 முறை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டிலும் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ல் 5% மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2007ல் மோசமான சரிவு பிறகு இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளது.

வேலை பறிபோகுமோ?

வேலை பறிபோகுமோ?

தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இது மேற்கொண்டு மந்த நிலைக்கு வழிவகுக்கலாம். இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசிஷனுக்கு வழிவகுக்கலாம். இதனால் எத்தனை லட்சம் பேரின் வேலை பறிபோகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே டெக் ஜாம்பவான்கள் பலவும் பணி நீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த போக்கு தொடரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

எனினும் நிபுணர்கள் ரெசிஷன் என்றால் மிகப்பெரிய பணி நீக்கம் என்பது அர்த்தமில்லை. அதேசமயம் 2024ம் ஆண்டில் 3.3 மில்லியன் பேருக்கு வேலை இல்லாமல் போகக் கூடும் என ப்ளூர்பெர்க் தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளது. இது பெரும்பாலும் ரெசிஷனால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணி நீக்கம் அதிகரிக்கலாம்

பணி நீக்கம் அதிகரிக்கலாம்

இது கடந்த 2001ல் 5.1 மில்லியன் எனும் அளவுக்கு இருந்தது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த உலகளாவிய சரிவுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

இந்த நேரத்தில் வங்கி சேவைகள், வணிக சேவைகள், வங்கி தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட் என பலவும் ஒயிட் காலர் பணியாளர்களின் எண்ணிக்கை என பலவற்றையும் விட பணி நீக்கம் அதிகமாக உள்ளது. இன்னும் பணி நீக்கத்தினால் அதிக தாக்கம் இருக்கலாம்.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

நிறுவனங்கள் சரினைக் காணும்போது ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கின்றன. முதலீட்டாளர்கள் இதனை புரிந்து கொண்டிருக்கலாம். எனினும் டெக் ஊழியர்கள் கவலைப் பட வேண்டாம். அது இந்தியாவோ அல்லது வேறு பகுதியாக இருந்தாலும் சரி. பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற தாழ்வுகள் என்பது இருப்பது தான் என கூறியுள்ளார். ஆக பணி நீக்கம் என்பது இருப்பது தான். எனினும் அப்படி டெக் துறையில் நடந்து வரும் வீழ்ச்சியால், இந்தியர்கள் பலரும் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். எனினும் பணி நீக்கம் என்பது குறைவாகத் தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fed reserve bank may hike rates more in coming months: Will layoffs increase due to recession?

Experts are predicting that recession may come amid various factors prevailing at the international level.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X