பவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரபரப்பான அமெரிக்க தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அதனை விட மிக பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும், தான் வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அது மட்டும் அல்ல, தேர்தலில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி குழப்பங்களுக்கும், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மிக எதிர்ப்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நிமிடம் என்னவாகுமோ? என்ற குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொருளாதாரத்தினை மீட்க செலவை அதிகரிக்க வேண்டும்

பொருளாதாரத்தினை மீட்க செலவை அதிகரிக்க வேண்டும்

இதற்கிடையிலும் அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வர, மிகப்பெரிய அளவில் செலவிட வேண்டும். அமெரிக்கா பொருளாதாரத்தினை கொரோனா என்னும் வைரஸ் சுரண்டிக் கொண்டு விட்டது.

ஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை

ஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை

ஆனால் ஊக்கத்தொகையினை பெறுவது இன்னும் தாமதமாகலாம். ஏனெனில் அமெரிக்கா தேர்தலில் இன்னும் தெளிவான முடிவுகள் வெளியாகவில்லை. ஆக இதற்கு மத்தியில் இந்த முடிவு வந்த பிறகே, ஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை நடக்கலாம். ஆக இது பல மாத போராட்டங்களுக்கு, அப்போது தான் முடிவு கிடைக்கும். அதன் பிறகே தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் உதவும் வகையில் மற்றொரு மிகப்பெரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்போது தான் அது பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கப்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

பிடனுக்கு அதிக வாய்ப்பு

பிடனுக்கு அதிக வாய்ப்பு

நடந்து முடிந்த தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, அதிபர் டிரம்ப் 4 மாகாணங்களில் வழக்கு தொடர்ந்தார். இதில், ஜார்ஜியா நீதிமன்றம் மற்றும் மெக்சிகன் மாகாணத்தின் நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது அதிபர் டிரம்புக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. ஆக இது ஜோ பிடனுக்கு வாய்ப்புகளை இன்னும் பிரகாசமாக்கியுள்ளது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

அமெரிக்கா பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டாலும், கண்ணோட்டம் அசாதாரணமானது. அது நிச்சயமற்றது என்றும் பவல் கூறியுள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இழந்த பாதி வேலைகளை மட்டுமே பொருளாதாரம் மீட்டெடுத்துள்ளது. அதோடு பொருளாதாரம் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் இருந்தாலும், அது மெதுவாகவே உள்ளது. அதே நேரம் செலவினமும் குறைந்துவிட்டது என்றும் மத்திய தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றது.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

கடந்த மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பானது அறிவித்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு பெரிய தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையும். எப்படி எனினும் தேர்தலுக்கு முன்பே அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தவறி விட்டது. ஒரு உடன்பாட்டை எட்ட தவறிவிட்டனர். இதனால் வணிகங்களுக்கும், தொழில் துறைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை குறித்தான வாய்ப்புகள் சந்தேகத்தில் உள்ளன.

முக்கிய பணி இது தான்

முக்கிய பணி இது தான்

அரசின் நிதிக்கொள்கையால் எங்களால் இயலாததை செய்ய முடியும். இது வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு இழந்த வருமானத்தினை கொடுக்கும். இதற்கு அரசின் செலவு மிக முக்கியம் என்றும் பவல் கூறியுள்ளார். எனினும் தேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி, அவர்களின் முக்கிய பணியே இந்த ஊக்கத் தொகைக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தான் இருக்கும்.

வட்டி விகிதமும் குறைப்பு

வட்டி விகிதமும் குறைப்பு

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஃபெடரல் வங்கி டிரில்லியன் கணக்கான டாலர்களை புழக்கத்தில் விட்டது. இதன் மூலம் பணப்புழக்கத்தினை அதிகரித்தது. அதோடு வட்டி விகிதத்தினையும் பூஜ்ஜியத்துக்கு அருகிலாக குறைத்தது. மேலும் எதிர்காலத்திற்காக இந்த விகிதங்களை குறைவாக வைத்திருப்பதாகவே ஃபெடரல் வங்கி தனது அறிக்கையில் கூறியிருந்தது.

வட்டியில் இப்போதைக்கு மாற்றமில்லை

வட்டியில் இப்போதைக்கு மாற்றமில்லை

மேலும் பொருளாதாரத்தினை நாங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பெற முடியும், ஆனால் அரசாங்கமெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நடப்பு ஆண்டு டிசம்பர் 31க்கு பிறகு ஃபெடரல் வங்கி வட்டி விகித மாற்றத்தினை பற்றி சிந்திக்கலாம். அதன் பிறகு கார்ப்பரேட் கடன் வசதியினை மீண்டும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பவல் கூறியுள்ளார்.

முந்தைய தொகுப்பு போதுமானது அல்ல

முந்தைய தொகுப்பு போதுமானது அல்ல

ஆக அரசாங்கம் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதன் பொருட்டு, அரசாங்க கடன் மற்றும் அடமான ஆதரவு பத்திரங்களை வாங்குவதை அதிகரிக்கலாம். இதற்கு முன்பாக இருந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, அதிலும் கொரோனாவால் போடப்பட்ட துளையினை சரி செய்ய இது போதுமானதாக இல்லை என்றும் கிராண்ட் தோர்டனின் பொருளாதார நிபுணர் டயான் ஸ்வோங்க் கூறியுள்ளார்.

நிதிக் கொள்கை முக்கிய பங்கு

நிதிக் கொள்கை முக்கிய பங்கு

நிதி கொள்கையானது பெருகி வரும் அபாயங்களை சிறப்பாக சமாளிக்க முடியும், இதன் மூலம் மத்திய வங்கி பொருளாதாரத்தினையும் ஆதரிக்க முடியும் என்றும் பவல் கூறியுள்ளார். டிசம்பர் 31 வரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பது நிச்சயம் நல்ல விஷயம் தான். அது கொரோனாவினால் துவண்டு போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உறுதுணை புரியும். ஆக நிச்சயம் இது பொருளாதார வளர்ச்சிகு வழிவகுக்கும் என்பதே ஃபெடரல் வங்கியின் எதிர்பார்ப்பு.

தங்கத்துக்கு ஆதரவு

தங்கத்துக்கு ஆதரவு

ஆனால் இது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பலாம். ஏனெனில் வட்டி குறைவாக இருக்கும் பட்சத்தில், மற்ற முதலீடுகளில் லாபம் குறையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Federal Reserve chairman powell still thinking US needs more stimulus for recovery

Federal Reserve chairman jerome powell still thinking US needs more stimulus for full Economic recovery
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X