உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவிற்கு BBB- ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சவரின் அமைப்பின் மதிப்பு முறை அடிப்படையிலேயே தவறாக உள்ளது என எக்னாமிக் சர்வே அறிக்கையில் நிதியமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவுக்கு BBB- ரேட்டிங்
இந்திய சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பு உலகின் 5வது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவின் முதலீட்டுத் தன்மை குறித்த மதிப்பீட்டில் மிகவும் குறைவான அளவீடாக இருக்கும் BBB- மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது.
இதைக் குறித்து இன்று வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பு கொடுத்துள்ள மதிப்பீட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பின் அடிப்படையே தவறாக இருப்பதை உணர்த்துகிறது.

அன்னிய செலாவணி
இந்திய பொருளாதார அமைப்பின் அடிப்படை தவறாகக் கணிக்கப்பட்டு உள்ள ரேடிங்க்-ஐ கொண்டு இந்திய நிதியியல் கொள்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது. மேலும் இந்திய அன்னிய செலாவணி இருப்பைக் கொண்டு 2.8 standard deviation எதிர்மறை நிகழ்வைச் சமாளிக்க முடியும்.

கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம்
மேலும் இந்திய சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பின் மதிப்பீட்டு வெளிப்படையாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி தலைமை பொருளாதார ஆலோசகரும் இன்று நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

முதலீட்டுச் சந்தை
சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பின் மதிப்பீடு முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த மதிப்பீட்டால் இந்திய சந்தையில் வரும் அன்னிய முதலீடுகள், கடன் பெறும் உரிமை, பத்திய முதலீட்டுச் சந்தை எனப் பல விஷயங்களை நேரடியாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா குற்றசாட்டு
இந்தியாவை போலவே சீனாவும் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பின் கணக்கீட்டு முறையையும், மதிப்பீடு செய்யும் முறையையும் தவறு என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னணி வளரும் நாடுகள் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பின் கணக்கீட்டு முறை வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சரியானதாக இருக்கும் எனவு கருத்து நிலவுகிறது

உதய் கோட்டாக்
இதேபோல் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பு இந்தியாவிற்குக் கொடுத்துள்ள BBB- ரேட்டிங் குறித்து கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் கூறுகையில், BBB- ரேட்டிங் மதிப்பீட்டில் நாணய மதிப்பு, பண புழக்கம், பொருளாதார வளர்ச்சி, கடன் அளவு என பல காரணிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.