இந்தியாவில் ஏற்கனவே பசுமை பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
கடந்த பட்ஜெட்டின் போது இதுகுறித்து அமைச்சர் கூறிய நிலையில் தற்போது பசுமை பத்திரங்களை வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியபோது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் பசுமை பத்திரங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பசுமை பத்திரங்கள்
பசுமை பத்திரங்கள் மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது என்றும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்த திட்டத்தின் ஒரு பகுதி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நீண்டகால பத்திரங்கள்
பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அனுமதி பெறப்பட்டு இந்த பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நீண்டகால பாத்திரங்களாக இவை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பொது திட்டங்கள்
பசுமை பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதி அரசின் பொது திட்டங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 5.95 கோடி ரூபாய் சந்தை யில் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications