பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவர் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட் அறிக்கை தயாரிப்புகள் முடிக்கப்பட்ட பின்பு இதை மக்களுக்கும், பிற அரசு துறைகளுக்கும், தொழிற்துறைக்கும் எடுத்துரைக்கும் விதமாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை நடத்தும்.

பல ஆண்டுகளாக மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படு வரும் நிலையில் குடியரசு தினமான இன்று மத்திய நிதியமைச்சகம் அலுவலக பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் இருந்து அனைவருக்கு மத்தியில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி நார்த் பிளாக் பகுதியில் இருக்கும் பட்ஜெட் பிரின்டிங் பிர்ஸ் பகுதியில் நடந்தது.

ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!

முக்கிய தலைவர்கள்

முக்கிய தலைவர்கள்

இன்று நடந்த அல்வா நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன்ராவ், நேரடி வரி துறை மற்றும் CBIC பிரிவின் தலைவர்கள் மற்றும் இதர நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 லாக்-இன் செயல்முறை

லாக்-இன் செயல்முறை

பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் "லாக்-இன்" செயல்முறையைத் துவங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சகத்தால் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி குடியரசு நாளான இன்று நடத்தப்பட்டு உள்ளது.

 மத்திய நிதியமைச்சர்

மத்திய நிதியமைச்சர்

வழக்கமாக யார் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாரோ அவர் தான் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்குவார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் இன்று அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் சக ஊழியர்களுக்கும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த அல்வா பகிரப்பட்டது.

  பிரின்ட்டிங் பிரஸ்

பிரின்ட்டிங் பிரஸ்

இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்ட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சகத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் எப்போதும் நடக்கும்.

 பாதுகாப்பு, ரகசியம்

பாதுகாப்பு, ரகசியம்

பட்ஜெட் அறிக்கையை அச்சிடப்படும் பணியை அதிகப்படியான பாதுகாப்பு உடனும், ரகசியமாகவும் செய்யப்படும் காரணத்தால் நாடாளுமன்ற அச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அச்சிடுவது வழக்கம்.

 பிப்ரவரி 1 வரை லாக் இன்

பிப்ரவரி 1 வரை லாக் இன்

இந்த பட்ஜெட் அறிக்கையை அச்சிடப்படும் ஊழியர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு தான் வெளியே வருவார்கள். அதுவரையில் நிதியமைச்சகத்தின் பேஸ்மென்ட்டில் இருக்கும் அச்சகத்தில் இருப்பார்கள்.

 அல்வா நிகழ்ச்சி

அல்வா நிகழ்ச்சி

2021ல் அல்வா நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவிக்க 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் அல்வா நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Paperless பட்ஜெட்

Paperless பட்ஜெட்

மேலும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக Paperless பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது, இந்த ஆண்டும் தொடரப்படுகிறது.

 Union Budget மொபைல் ஆப்

Union Budget மொபைல் ஆப்

இதை தொடர்ந்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் Union Budget மொபைல் ஆப்-ல் பட்ஜெட் முடிந்த கையோடு பதிவேற்றம் செய்யப்படும்.

 அல்வா விழா

அல்வா விழா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் அல்வா விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களோடு யூனியன் பட்ஜெட் அச்சக உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

  பட்ஜெட் தயாரிப்புக் குழு

பட்ஜெட் தயாரிப்புக் குழு

இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் இருந்தவர்களின் பட்டியல் டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார், அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் லைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டுத் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (DIPAM) துறையின் செயலாளர் ஆவார், அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார், விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Minister Nirmala Sitharaman holds budget 2023 halwa ceremony in Budget Press situated inside North Block

Finance Minister Nirmala Sitharaman holds budget 2023 halwa ceremony in Budget Press situated inside North Block
Story first published: Thursday, January 26, 2023, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X