நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் லாபம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதி மீது கூடுதலான வரி விதிக்கப்பட்டுச் சப்ளை டிமாண்ட் அளவை சரி செய்வது வழக்கம், இதேபோல் வெளிநாடுகளில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் போது இந்திய ஏற்றுமதிகளை அதிகளவில் வெளிநாட்டுச் சந்தைக்குக் கொண்டு வர வரிச் சலுகை அளிப்பதும் வழக்கம்.

 

அந்த வகையில் தற்போது ஸ்டீல் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது-க்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் வேளையில் ஏற்றுமதி வரி காரணமாக விலை போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏற்றுமதி அளவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக ஸ்டீல் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ஏவுகணை ஏற்றுமதி செய்யும் இந்தியா.. வல்லரசு கனவை நோக்கி இந்தியா பயணம்..! ஏவுகணை ஏற்றுமதி செய்யும் இந்தியா.. வல்லரசு கனவை நோக்கி இந்தியா பயணம்..!

 மத்திய நிதி அமைச்சகம்

மத்திய நிதி அமைச்சகம்

மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இரும்புத் தாது கட்டிகள் மற்றும் 58 சதவீத இரும்புக்கும் குறைவான தாது மணல்-க்கு (Fines) ஏற்றுமதி வரியை மொத்தமாக நீக்கப்பட்டுப் பூஜ்ஜிய ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இரும்புத் தாது கட்டிகள் மற்றும் '58 சதவீதத்துக்கு மேல் இருக்கும் தாது மணல்-க்கு (Fines) வரி விகிதம் 30 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.

வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

இதேபோல் இரும்புத் தாது துகள்களின் (pellets) ஏற்றுமதிக்கு ஜீரோ ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் இரும்பு மற்றும் ஸ்டீல் தாதுகளை உருக்காலையில் பிராசஸ் செய்யப்பட்ட பின்பு கிடைக்கும் பிக் ஐயன் மற்றும் ஸ்டீல்-ன் ஏற்றுமதிக்கும் ஜீரோ வரி விதிக்கப்பட்டு உள்ளது.

நிலக்கரி
 

நிலக்கரி

மேலும், ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதமாகவும், கோக் மற்றும் செமி-கோக்கிற்கு 5 சதவீதமாகவும் இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்டீல் ஏற்றுமதி

ஸ்டீல் ஏற்றுமதி

இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி அக்டோபர் மாதம் 66 சதவீதம் குறைந்துள்ளது, நடப்பு நிதியாண்டில் இது தான் அதிகபட்ச சரிவாகும். உலகளாவிய குறைவான தேவை மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலைகள் காரணமாக இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 360,000 டன்களாகக் குறைந்துள்ளது.

வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

இதன் காரணமாகவே மத்திய நிதியமைச்சகம் வரியை குறைத்து இந்திய பொருட்களுக்கு விலையில் தளர்வு அளிக்கப்பட்டு அதிக ஏற்றுமதியைப் பதிவு செய்யும் வகையில் வரி குறைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டீல் அமைச்சகம்

ஸ்டீல் அமைச்சகம்

ஸ்டீல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 இல் ஏற்றுமதி 1.05 மில்லியன் டன்களாக இருந்த நிலையில் அக்டோபர் 2022ல் ஸ்டீல் ஏற்றுமதி அக்டோபர் மாதம் 66 சதவீதம் குறைந்து வெறும் 360,000 டன்களாகக் குறைந்துள்ளது. செப்டம்பர் 2022 ஏற்றுமதி அளவீட்டை ஒப்பிடும் போது அக்டோபரில் 44 சதவீதம் குறைந்துள்ளது.

இறக்குமதி நாடு

இறக்குமதி நாடு

சற்றும் எதிர்பாராத விதமாக இந்தியா அக்டோபர் மாதம் ஸ்டீல் ஏற்றுமதி நாடாக இருந்து ஸ்டீல் இறக்குமதி நாடாக மாறியுள்ளது, இக்காலகட்டத்தில் நாட்டின் ஸ்டீல் ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதி இருந்த காரணத்தால் ஸ்டீல் இறக்குமதி நாடாக இந்தியா மாறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாகும்.

7 மாதம்

7 மாதம்

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், அலாய் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் ஏற்றுமதி 145 சதவீதம் உயர்ந்து, கடந்த ஆண்டின் 0.7 மில்லியன் டன்லிருந்து 1.64 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வரிக் குறைப்பின் மூலம் அனைத்து ஸ்டீல் மற்றும் இருப்பு ஏற்றுமதியாளர்கள் பலன் அடைவார்கள்.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் சர்வதேச பொருளாதார மந்தநிலையில் தாக்கத்தின் முதல் அடி விழுந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது, அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 16.65 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Ministry cuts export tax on steel products, iron ore after steel exports dipped 66 percent in October

Finance Ministry cuts export tax on steel products, iron ore after steel exports dipped 66 percent in October
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X