ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அடுத்து வரும் மார்ச் 2020க்குள் பொதுத்துறையை சேர்ந்த நிறுவனங்களான ஏர் இந்தியாவும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளாதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாங்கள் இந்த அண்டு முடிவிற்குள் இந்த நிறுவனங்களை விற்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் அரசின் நிதி இலக்கை அடைய இந்த விற்பனை மிக முக்கியம் என்றும் கருதப்படுகிறது.

கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..!கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..!

விரைவில் விற்பனை செய்யப்படும்

விரைவில் விற்பனை செய்யப்படும்

அரசு பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 2020க்குள் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் கருதப்படுகிறது. எனினும் அரசு தரப்பில் நடப்பு ஆண்டுக்குள்ளேயே இந்த விற்பனை முடிவடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலக்கை அடைய விற்பனை அவசியம்

இலக்கை அடைய விற்பனை அவசியம்

நடப்பு நிதியாண்டில் 1 டிரில்லியன் ரூபாய் என்ற முதலீட்டு இலக்கை அடைய இந்த இரு நிறுவனங்களின் விற்பனை அவசியம். இதன் மூலம் அரசின் இலக்கை அடைய இது ஏதுவாக அமையும். ஏற்கனவே ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க அரசு முன்னெடுத்து வரும் நிலையில், பலர் இதற்காக ஆர்வம் தெரிவித்தாலும் இதுவரை யாரும் வாங்க முன் வரவில்லை.

புதிய முதலீடுகள் அதிகரிப்பு

புதிய முதலீடுகள் அதிகரிப்பு

நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க சரியான நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தான் தற்போது பல துறைகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன என்றும் நிர்மலா சீதாராமன் மேற்கோளிட்டு காட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தொழில் துறையை சேர்ந்தவர்கள் தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் புதிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விற்பனையில் முன்னேற்றம்

விற்பனையில் முன்னேற்றம்

சில பிரிவுகளில் அரசின் துரித நடவடிக்கையால் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு இதை சரி செய்வதற்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூலும் புத்துயிர் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

சட்டத்தினை பலப்படுத்தியுள்ளது

சட்டத்தினை பலப்படுத்தியுள்ளது

எஸ்ஸார் நிறுவனம் தொடர்பான திவால் நடைமுறை வழக்கில் கடன் தொகை பங்கீட்டில், கடனாளர் குழுவுக்கு முழுக்க உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. மேலும் இதில் தேசிய நிறுவனம் சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதில் தலையிடக்கூடாது என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட இந்த நிறுவனத்திற்கு விரைவில் சரியான தீர்வு கிடைக்கும் என்றும், கடனாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையும் விரைவில் கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மேலும் திவால் சட்டத்தினை இந்த தீர்ப்பு மேலும் பலப்படுத்தியுள்ளது என்றும் நிர்மலா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance ministry says Air India and Bharat petroleum will be sold by March 2020

Finance ministry says Air India and Bharat petroleum will be sold by March 2020. It will help boost up Rs.1 trillion economies for current financial year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X