2022ஆம் ஆண்டின் முதல் குட் நியூஸ் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குக் கலவையான முதலீட்டு லாபம் கிடைத்துள்ள வேலையில் புத்தாண்டு புதிய சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கத் தயாராகி உள்ளனர்.

 

நீங்கள் இன்னும் தயாராகவில்லை எனில், உடனே கடந்த வரும் நீங்கள் செய்த முதலீடுகள், அதன் மூலம் கிடைத்த லாபம், நஷ்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து கடந்த வருடம் நீங்கள் செய்த தவறுகளை இந்த வரும் திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

முதலீட்டாளர்கள் எப்போதும் தங்கள் முதலீட்டை ஓரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது என்பது அடிப்படை காரணி, அந்த வகையில் சிற முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் அதிகம் நம்பியிருக்கும் சில முக்கியமான முதலீட்டுப் பிரிவில் சிறு சேமிப்பு பிரிவும் உள்ளது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சிறு சேமிப்பு பிரிவைச் சார்ந்து வெளியிட்டுள்ளது.

80 காண்டம் ஆர்டர் செய்த ஆசாமி.. சோமேட்டோ, ஸ்விக்கி-யின் உச்சகட்ட புத்தாண்டு வர்த்தகம்..!

சிறு சேமிப்புத் திட்டம்

சிறு சேமிப்புத் திட்டம்

இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில், அரசின் முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என நீண்ட காலமாக எதிர்பார்த்து மக்கள் கவலையில் இருக்கும் நிலையில், ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு எவ்விதமான வட்டி மாற்றமும் இல்லையென அறிவித்துள்ளது.

நல்ல செய்தி

நல்ல செய்தி

வட்டியை உயர்த்தினால் மட்டும் நல்ல செய்தி அல்ல இன்றைய போட்டி மிகுந்த வர்த்தகம் தடுமாற்றம் அதிகம் கொண்ட நிலையில் வருமானம் பாதிக்காமல் இருந்தாலே நல்ல விஷயம் தான். அந்த வகையில் வட்டி விகிதத்தை மாற்றாமல் இருப்பது குட் நியூஸ் தான்.

மத்திய நிதியமைச்சகம்
 

மத்திய நிதியமைச்சகம்

மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனது சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை மாற்றும், அந்த வகையில் மார்ச் காலாண்டு, 2021-21ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டம் மீதான வட்டியை தற்போது இருக்கும் 4.0 முதல் 7.6 சதவீதத்தைத் தொட வேண்டும் என முடிவு செய்துள்ளது.

சுமார் 7 காலாண்டுகளாக மத்திய நிதியமைச்சகம் எவ்விதமான வட்டியும் மாற்றாமல் ஓரே விகிதத்தை வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிக்கை

ரிசர்வ் வங்கி அறிக்கை

இதற்கிடையில் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட State of the Economy அறிக்கையில் தங்களது நிர்வாகக் கணக்கின் படி சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் கணக்கிடப்பட்டதை விடவும் 42-168 அடிப்படை புள்ளிகளுக்கு அதிகமாக இருப்பதாக அறிவித்து இருந்தது. ஆயினும் மத்திய நிதியமைச்சகம் எவ்விதமான வட்டி குறைப்பையும் அறிவிக்கவில்லை.

எந்தத் திட்டம் எவ்வளவு வட்டி

எந்தத் திட்டம் எவ்வளவு வட்டி

தற்போது நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் மார்ச் 31, 2022 வரை அளிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு - 4 சதவீதம்

1 வருட கால வைப்பு - 5.5 சதவீதம்

2 வருட கால வைப்பு - 5.5 சதவீதம்

3 வருட கால வைப்பு - 5.5 சதவீதம்

5 வருட கால வைப்பு - 6.7 சதவீதம்

5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம் - 5.8 சதவீதம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 7.4 சதவீதம்

மாதாந்திர வருமான கணக்கு - 6.6 சதவீதம்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (VIII வெளியீடு) - 6.8 சதவீதம்

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 7.1 சதவீதம்

கிசான் விகாஸ் பத்ரா - 6.9 சதவீதம்

சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் - 7.6 சதவீதம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

First good news of 2022: Small savings schemes interest rates unchanged for January-March 2022

First good news of 2022: Small savings schemes interest rates unchanged for January-March 2022 2022ஆம் ஆண்டின் முதல் குட் நியூஸ் இதுதான்..!
Story first published: Saturday, January 1, 2022, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X