பிட்ச் கொடுத்த அப்டேட்.. சற்றே நிம்மதியடைந்த அதானி.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்ச் ரேட்டிங்ஸ் மதிப்பீடு செய்த அதானி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பத்திரங்கள் மீது உடனடி மாற்றம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் முந்தைய பணப்புழக்கத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது.

பிட்ச் குழுமத்தின் இந்த அறிவிப்பானது அதானி குழுமம் மோசடியான பங்கினை கையாள, மோசடியான பண பரிவர்த்தனை, வரவு செலவு கணக்கில் தவறு, வரி ஏய்ப்பு, போலியான பெயரில் நிறுவனங்கள் என பல குற்றச்சாட்டினை ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் முன் வைத்துள்ள நிலையில் வந்துள்ளது.

ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு..! ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு..!

கவனித்து வருகிறோம்

கவனித்து வருகிறோம்

எனினும் தற்போதைய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இது நீண்டகால அடிப்படையில் நிதியுதவி, செலவு, சாதகமற்ற ஒழுங்கு முறை என பலவற்றையும் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் உள்பட 8 நிறுவனங்களில் பிட்ச BBB-/Stable மதிப்பீடுகளை கொண்டுள்ளது. அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் senior secured US dollar notes rated at 'BBB- என்ற மதிப்பீட்டினையும், அதானி இண்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு senior secured US dollar notes rated at 'BBB-'/Stable என்ற மதிப்பீடையும், அதானி டிரான்ஸ்மிஷன் BB-/Stable என்ற மதிப்பீடும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மீதான மதிப்பீடானது senior secured US dollar notes 'BBB-'/Stable என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

ஹிண்டர்ன்பர்க் சர்ச்சை

ஹிண்டர்ன்பர்க் சர்ச்சை

கடந்த ஜனவரி 24ம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானது. இந்த அறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டின் மத்தியில் இன்று வரையில் அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் சரிவிலேயே காணப்படுகின்றன.

சிக்கலில் அதானி குழுமம்

சிக்கலில் அதானி குழுமம்

அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையினை புறம்பானது, இது ஆதாரமற்ற தகவல்கள் என கூறியிருந்தாலும், மறுபுறம் ஹிண்டர்ன்பர்க் நிறுவனமோ தாங்கள் எதற்காகவும் பின் வாங்க போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் தான் அதானி குழுமத்திற்கு எதிராக செபி, அதானி குழுமத்தின் அறிக்கைகளை மறுசீராய்வு செய்யும் என அறிவித்துள்ளது. இதே ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தின் கடன் குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் நலன் முக்கியம்

முதலீட்டாளர்களின் நலன் முக்கியம்

இதற்கிடையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினையே அதானி குழுமம் ரத்து செய்துள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எனினும் அதானியோ தற்போது சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம் உள்ளது. எங்களுக்கு முதலீட்டாளர்களின் நலன் தான் முக்கியம் என விளக்கம் கொடுத்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fitch ratings says no immediate impact on ratings of adani group of companies, securities

Fitch ratings says no immediate impact on ratings of adani group of companies, securities
Story first published: Friday, February 3, 2023, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X