வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 250 பில்லியன் டாலருக்கும் மேலாக அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளது.

தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆக இந்தியா இன்னும் சிறந்த முதலீட்டு தளமாக மாற நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

அன்னிய நிறுவனங்களை இந்தியாவில் நிறுவுவதில் மட்டும் அல்ல, அவர்களை எப்படி தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க வைப்பது? அவர்களுக்கு என்ன தேவை? அதுவும் ஒவ்வொரு கட்டத்திலும் எந்த மாதிரியான உதவிகள் தேவை? அதாவது உற்பத்தியில் எந்த மாதிரியான உதவி? இறக்குமதி செய்ய என்ன தேவை? இப்படி ஒவ்வொன்றையும் அடையாளம் காண வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா? அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..!முதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா? அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..!

முன்னுரிமை துறைகளை அடையாளம் காணுதல்

முன்னுரிமை துறைகளை அடையாளம் காணுதல்

முதலில் முன்னுரிமை துறைகளை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பலவீனமாக உள்ள துறைகளில் கவனம் செலுத்தலாம். எலக்ட்ரானிக்ஸ், கணினிகள், தொலைத் தொடர்பு துறை, துல்லியமான உபகரணங்கள் (precision equipment), தொழில்சாலை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கவனிக்கலாம். இவைகள் தான் உலகளாவிய வர்த்தகத்தில் 70% ஆகும். ஆனால் இதில் இந்தியாவின் பங்கு 0.7% மட்டுமே உள்ளது.

பிரச்சனைகளை கண்டறியுங்கள்

பிரச்சனைகளை கண்டறியுங்கள்

ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும். ஏனெனில் ஒவ்வொரு துறையும் பெரிய வருவாயை உருவாக்கக் கூடும். ஆனால் இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதால் வருவாய் குறைவாக இருக்கலாம்.

சிறந்த முதலீட்டாளர்களை அழையுங்கள்

சிறந்த முதலீட்டாளர்களை அழையுங்கள்

முக்கிய துறைகளில் பெரிய உற்பத்தியாளர்களாக மாற, சிறந்த உலகளாவிய நிறுவனங்களை அழைக்கவும். அவர்கள் புதுமை மற்றும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதால், இத்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும். இதற்கு சிறந்த உதாரணம் 1980களின் முற்பகுதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சுசூகி பயன்படுத்திய அதே விதம். சிறந்த தொழில் நுட்பம் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள்

முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதரவு

முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதரவு

முன்னணி முதலீட்டாளர்களுடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் விதமாக விவாதிக்கலாம். ஒரு முழு திட்ட சுழற்சிக்கும் நிறுவனத்தின் சார்பாக, அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்க ஒரு அதிகாரியை பரிந்துரைப்பது நல்ல யோசனை.

இடம் தான் முக்கிய பிரச்சனையே

இடம் தான் முக்கிய பிரச்சனையே

உற்பத்திக்கு தகுந்த இடத்தை தயாராக கொடுப்பது. நிலம் மற்றும் ஒப்புதல்களை வாங்குவதே முதலீட்டாளர்களை விரட்டுகிறது. சீனா போன்ற பல நாடுகளில் நூற்றுக்கணகான செயல்பாட்டுத் தொழில் துறை மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் தேவையான அனுமதிகளுடன் தயாராக உள்ளது. அப்படி இல்லையென்றாலும் அனைத்து அனுமதிகளும் விரைவில் கிடைக்கின்றன.

ஆக உற்பத்தியாளர்கள் அனுமதி பெற்ற சில வாரங்களுக்குள், தங்களது மெஷினரி உள்ளிட்டவற்றை நிறுவி சில வாரங்களில்/ மாதங்களில் உற்பத்தியை தொடங்குகிறார். National Master Plan திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதே போன்று 32 இடங்களில் தொழில்துறைக்கு தேவையான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனவாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five important things India can do to become an excellent place for doing business

Five important things India can do to become an excellent place for doing business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X