ரயில் டிக்கெட் விலையில் விமான கட்டணம்.. சலுகைகளை அள்ளி வழங்கும் நிறுவனம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.

 

ஆனால் தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் விமான டிக்கெட்டுகள் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக டிக்கெட் விலை குறைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய விமான நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட ரயில் கட்டணத்தில் விமான கட்டணத்தை நிர்ணயம் செய்திருப்பது பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமான கட்டணம்

விமான கட்டணம்

இந்தியாவில் விமான நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக, விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியால் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண குறைப்பு உள்பட மக்களை கவரும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆகாசா ஏர்

ஆகாசா ஏர்

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் தொடங்கப்பட்ட புதிய விமான நிறுவனம் ஆகாசா ஏர். இந்நிறுவனம் ஆரம்பத்திலேயே பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் விமான கட்டணத்தை விட ஆகாசா விமான கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் அதிகம் பயணம் செய்ய ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பயணிகளுக்கு வசதி
 

பயணிகளுக்கு வசதி

மேலும் ஆகாசா ஏர் தங்களுடைய பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம், தரமான உணவு, அன்பான உபசரிப்பு உள்பட பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு செய்து கொடுத்தது.

ரயில் கட்டணத்தில் டிக்கெட்

ரயில் கட்டணத்தில் டிக்கெட்

இந்த நிலையில் தற்போது ஆகாசா ஏர் விமானம் நிறுவனம் கிட்டத்தட்ட ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவித்துள்ளது. பண்டிகை கால சலுகையாக இந்த அறிவிப்பை ஆகாசா விமானம் வெளியிட்டுள்ளதை அடுத்து பலர் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சலுகை விலை

சலுகை விலை

சலுகை விலையிலான விமான கட்டணத்தை ஆகாசா ஏர் இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே இந்த சலுகை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில், கொச்சி - பெங்களூர் பயணம் செய்ய கட்டணம் ரூ.1496 மட்டுமே. அதேபோல் அகமதாபாத் - மும்பை வழித்தடத்தில் பயணம் செய்ய ரூ.1600 மட்டுமே. மேலும் மும்பை - அகமதாபாத் ரூ.1600 கட்டணம் என்றும், பெங்களூரு-கொச்சி ரூ.1751 என்றும், டெல்லி-அகமதாபாத் ரூ.2592 என்றும் சலுகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கட்டணங்கள் கிட்டத்தட்ட ரயில் கட்டணத்திற்கு சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flight tickets are in the cost of Train, The Amazing offer given by Akasa Air!

Cheap Flight Tickets: Flight tickets are available at the cost of the train, Akasa airline brought this offer. Akasa is currently offering flight tickets in low budget.
Story first published: Tuesday, October 11, 2022, 7:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X