பிளிப்கார்ட்-பேடிஎம் கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ-காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் மற்றும் பேமெண்ட் செயலியான பேடிஎம் ஆகிய இரண்டும் கூட்டணி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட் என்பதும் இந்நிறுவனம் தற்போது விழாக்கால சலுகையை அளித்துள்ளதால் ஏராளமானோர் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கூடுதல் சலுகையாக பிளிப்கார்ட் நிறுவனத்துடன் பேடிஎம் நிறுவனம் கூட்டணி வைத்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சில சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி பிளிப்கார்ட், அமேசான் தேவையில்லை.. வந்தாச்சு அரசு ஈகாமர்ஸ் தளம்..! இனி பிளிப்கார்ட், அமேசான் தேவையில்லை.. வந்தாச்சு அரசு ஈகாமர்ஸ் தளம்..!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

தீபாவளி உள்பட பல பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதை அடுத்து தற்போது பிளிப்கார்ட் 'பிக் பில்லியன் டே' என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் ஏராளமான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி வரும் நிலையில் தற்போது பேடிஎம் செயலி, பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மேலும் சில சலுகைகளை பெறுவார்கள்.

 பிளிப்கார்ட்-பேடிஎம் கூட்டணி

பிளிப்கார்ட்-பேடிஎம் கூட்டணி

இந்த நிலையில் பிளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்ய விரும்புபவர்கள் இனி பேடிஎம் செயலி மூலமே ஷாப்பிங் செய்யலாம். பேடிஎம் செயலியில் உள்ள பிளிப்கார்ட் ஐகானை கிளிக் செய்தால் பிளிப்கார்ட் லைட் பக்கத்திற்கு செல்லும் என்றும் அதன் மூலம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகைகள்
 

கூடுதல் சலுகைகள்

அதுமட்டுமின்றி பேடிஎம் நிறுவனம் பிரத்யேகமாக சில சலுகைகளை பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு தருவதால் அந்த சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளிப்கார்ட்டில் வாங்கும் பொருட்களுக்கான தொகையை பேடிஎம் மூலம் செலுத்தலாம் என்றும் இதன் மூலம் மேலும் சில சலுகைகள் கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

செப்டம்பர் முதல் வாரத்திலேயே பேமெண்ட் செயலியான பேடிஎம், இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் உடனான கூட்டணியை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் செயலி தற்போது சின்ன சின்ன நகரங்களில் உள்ள பொதுமக்கள் கூட பயன்படுத்தி வருவதால், இந்த கூட்டணியால் பல நகரங்களில் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சி

இந்தியாவில் பேடிஎம் டிஜிட்டல் புரட்சி செய்வதில் முன்னணியில் உள்ளது என்பதும், பேடிஎம் சூப்பர் செயலி என்பது அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மின் கட்டணம் உள்பட பல்வேறு வகையான பில் கட்டணம் செலுத்துதல், இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்துதல், கல்வி கட்டணம் செலுத்துதல், உள்பட பலவித பேமெண்ட்களை பேடிஎம் மூலம் எளிதில் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart and Paytm deal partnership, Customers Shop on Payment App!

Flipkart and Paytm deal partnership, Customers Shop on Payment App! | பிளிப்கார்ட்-பேடிஎம் கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள்?
Story first published: Saturday, October 1, 2022, 7:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X