பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர்.. குறைந்த விலையில் பொருட்களை அள்ள சரியான வாய்ப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றாலே சலுகைகளையும் ஆஃபர்களையும் அள்ளி வீசுவார்கள். அதிலும் பண்டிகை காலம் என்றால் சொல்லவே தேவையில்லை.

இதற்கிடையில் தனது பிக் பில்லியன் டே சலுகையினை பிளிப்கார்ட் நிறுவனம், வருகிற அக்டோபர் 16ம் தேதியன்று தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிரடியான பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையானது அக்டோபர் 21 வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

பிரைம் உறுப்பினர்களுக்கு முன்பே சலுகை
 

பிரைம் உறுப்பினர்களுக்கு முன்பே சலுகை

இதே காலத்தில் அமேசான் நிறுவனம் தி கிரேட் இந்தியன் சேல் என்ற விற்பனையை வழங்க திட்டமிட்டுள்ளது. உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனலாம். குறிப்பாக பிளிப்கார்டின் பிளஸ் உறுப்பினர்களுக்கும், அமேசானின் பிரைம் உறுப்பினர்களுக்கும் இன்னும் கூடுதலான பல சலுகைகளை வழங்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

விநியோக சங்கிலி பலப்படும்

விநியோக சங்கிலி பலப்படும்

ஒரு புறம் இந்த அதிரடியான சலுகையினால் மக்கள் நல்ல பலனை அடைவார்கள் என்றாலும், மறுபுறம் இதனால் இந்தியாவின் விநியோக சங்கிலி பலப்படும் என்பதும் ஒரு நல்ல விஷயம். அதோடு இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் இது வழிவகுக்குகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பண்டிகைகால விற்பனைக்கு முன்னதாக அந்த நிறுவனம் அதன் விநியோக சங்கிலியையும் விரிவு படுத்தியுள்ளது.

பல்லாயிரம் வேலைகளை உருவாக்கும்

பல்லாயிரம் வேலைகளை உருவாக்கும்

இந்த விழாக்கால சலுகையில் ஏற்கனவே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, லட்சக்கணக்காக எம் எஸ் எம் இக்களும், கைவினைஞர்களும், விற்பனையாளர்கள் மற்றும் கிரானாக்களும் சந்தை அணுகளை ஆதரிப்பதற்கும், பிளிப்கார்டின் இந்த விரிவாக்கம் மிக உதவிகரமான தாகவும் இருக்கும். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரம் வேலைகளை உருவாக்கும்.

70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
 

70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

அதோடு, டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் மற்றும் லடாக், பிஷ்ணுபூர் (மணிப்பூர்), நாகாலாந்து உள்ளிட்ட நகரங்களில் பிளிப்கார்டின் இருப்பை வலுப்படுத்தவும் இது உதவும். பிளிப்கார்டின் இந்த அதிரடியான விழாக்கால சலுகை மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொற்று நோய் துரிதப்படுத்தியுள்ளது

தொற்று நோய் துரிதப்படுத்தியுள்ளது

இது குறித்து பிளிப்கார்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக சிறிய நகரங்களில் எங்கள் விநியோக சங்கியிலின் விரிவாக்கத்தினை இந்த தொற்று நோய் துரிதப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் துரிதப்படுத்த உதவும். இது கைவினைஞர்கள், விற்பனையாளர்கள், எம்எஸ்எம்இக்கள், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய உதவும்.

உள்கட்டமைப்பு & வேலைவாய்ப்பு முதலீடை மேம்படுத்தும்

உள்கட்டமைப்பு & வேலைவாய்ப்பு முதலீடை மேம்படுத்தும்

அதோடு இது உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு, முதலீடு உள்ளிட்டவற்றிற்கு உதவும். இது பிளிப்கார்ர் நிறுவனம் தனது செயல்பாட்டினை கணிசமாக உயர்த்துவதற்கும் உதவும் என்கிறார் அமிதேஷ் ஜா. பிளிப்கார்ட் நிறுவனம் நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அதிகரித்துள்ளது. இது வேகமாக மற்றும் திறமையான இ-காமர்ஸ் அனுபவத்தினை வழங்குகிறது.

உள்நாட்டு விநியோக சங்கிலி பலப்படும்

உள்நாட்டு விநியோக சங்கிலி பலப்படும்

இதற்கிடையில் தான் தற்போது, இந்த விழாக்கால பருவத்திற்கு கூடுதலாக 50,000க்கும் மேற்பட்ட கிரானாக்களின் உள்நுழைவு மூலம் இது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக பிளிப்கார்ர்டின் இந்த அதிரடியான சலுகை மூலம் உள்நாட்டு விநியோக சங்கிலி நிச்சயம் பலப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியாளர் தரப்பிலும் வேலை அதிகரிக்கும்

உற்பத்தியாளர் தரப்பிலும் வேலை அதிகரிக்கும்

இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த சலுகையினால், உற்பத்தியாளர் தரப்பிலும் வேலைகள் அதிகரிக்கும். ஆக பிளிப்கார்டின் விரிவாக்கம் மற்றும் விற்பனை அதிகரிப்பானது இன்னும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இதற்கிடையில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கின்றன. அப்போது ஆர்டர்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart’s big billion day 2020: its strengthens supply chain across india

Flipkart’s Big billion days may create thousands of job offers and strengthen supply chain across india
Story first published: Thursday, October 8, 2020, 11:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X