மிந்த்ரா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் 5000 ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுவான இந்த கொரோனா ரணகளத்தில் பல நிறுவனங்கள் செலவினைக் குறைக்க தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அதோடு சம்பள குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தம் என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதை காண முடிகிறது.

 

இதனால் இந்திய ஊழியர்கள் பலர் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை கூட இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, புதிய ஆட்களை பணியில் அமர்த்தி வருகின்றன.

 மிந்த்ரா பணியமர்த்தல்

மிந்த்ரா பணியமர்த்தல்

முன்னணி ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டின் துணை நிறுவனமான மிந்த்ரா , ஆன்;லைன் பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் ஸ்டோரினை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் ஜூன் 19 முதல் ஜூன் 22 வரையிலான காலத்தில் எண்ட் ஆஃப் ரீசன் சேலினை தொடங்கியுள்ளது.

ஊழியர்கள் பணியமர்த்தல்

ஊழியர்கள் பணியமர்த்தல்

இதற்காக இந்த நிறுவனம் 5000 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த எண்ட் ஆஃப் தி சேலின் போது வீட்டில் இருந்து வேலை செய்வதை வலியுறுத்தி வருகிறது. மிந்த்ராவின் சில ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 மிந்த்ராவின் கூடுதல் பணியாளர்கள்
 

மிந்த்ராவின் கூடுதல் பணியாளர்கள்

மேலும் முந்தைய ஆண்டுகளைப் போல் ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தினோம் என்று மிந்த்ராவின் தலைமை நிர்வாக அதிகாரி அமர் நாகரம் கூறியுள்ளனர். மேலும் இந்த சமயத்தில் வேலை வருபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கூட இது சவாலான நேரம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

ஊழியர்களுக்கு சலுகை

ஊழியர்களுக்கு சலுகை

மேலும் லாக்டவுன் தொடங்கியதில் இருந்து மிந்த்ரா அணிகளுக்கு ஆன்லைன் யோக மற்றும் தியான அமர்வுகள் காலையில் நடத்தப்படுகின்றன. எங்கள் ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும் அமர் நாகரம் கூறியுள்ளார். அதோடு பகல் நேரங்களில் மின்னஞ்சல் அனுப்பு ஊழியர்களை ஓய்வு எடுக்குமாறு வலியுறுத்துகிறது. 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24/7 கிடைக்கும் வைபை மூலம் ஊழியர்கள் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart’s myntra hired 5000 employees for end of reason sale

Myntra, an online fashion and life style store owned by flipkart, its hired 5,000 employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X