நிர்மலா சீதாராமனின் பலே அட்வைஸ்.. 3 முக்கிய டிப்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் தயாரிப்பில் பிசியாக இருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கோட்டா-வில் மாணவர்களுக்கான யுவ சக்தி சம்வாத் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

 

சமீபத்தில் உடல்நல பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் முழு வேகத்துடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் இக்கூட்டத்தில் தொழிலதிபர்கள் தோல்வி அடைந்தால் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வசூலிக்க முடியாத கடன்கள்.. உண்மையை உடைத்த நிர்மலா சீதாராமன்..!5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வசூலிக்க முடியாத கடன்கள்.. உண்மையை உடைத்த நிர்மலா சீதாராமன்..!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கோட்டா நகரில் நடந்த யுவ சக்தி சம்வாத் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவர்கள் மத்தியில் ஒரு தொழிலதிபராக மாறுவதற்கான முக்கியப் படிகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

தொழிலதிபராக மாற முக்கியமாக, உங்கள் வர்த்தகம் வொர்க்அவுட் ஆகவில்லை எனில் அதை மூடிவிட்டு புதிய வர்த்தகத்தைத் துவங்க வேண்டும், ஒரு வர்த்தகத்தில் தோல்வி அடைந்துவிட்டால் யாரும் பிளாக் மார்க் செய்துவிடமாட்டார்கள். அதேபோல் வர்த்தகத்தை மூடுவது என்பது தவறான விஷயம் இல்லை, தோல்வியை ஒப்புக்கொண்டு அடித்த தொழில்களைத் துவங்குவதே தொழிலதிபராக மாற முக்கியப் படி எனக் கூறியுள்ளார்.

டிப்ஸ் 2
 

டிப்ஸ் 2

இதைத் தொடர்ந்து ஒரு தொழிலதிபர் நிதியியல் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ரிஸ்க் எடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதேபோல் தொழிலதிபர்களுக்கு மத்திய மாநில அரசு அளிக்கும் நிதி திட்டம், உதவி திட்டங்கள் குறித்து நன்கு அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

டிபிஸ் 3

டிபிஸ் 3

3-வதாக சந்தையில் பிற சேவை அல்லது உற்பத்தியாளர்களை விட நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்களா என்பதை எப்போதும் கணக்கிடவும், உங்கள் சேவை/ தயாரிப்பின் தரம் என்ன..? உங்கள் சேவை/ தயாரிப்பின் விலை என்ன..? உங்கள் சேவை/ தயாரிப்பின் பயன்பாடு என்ன..? ஆகியவற்றுக்கான பதிலைத் தொடர்ந்து தேட வேண்டும்.

மாநில அரசு பங்கு

மாநில அரசு பங்கு

இந்தியாவில் வர்த்தகச் சூழ்நிலையை மேம்படுத்துவது குறித்துக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், நாட்டில் ease of doing business சூழ்நிலையை மேம்படுத்துவது மத்திய அரசின் பணி மட்டும் அல்ல மாநில அரசின் பணியும் தான். மாநிலங்களில் தான் வர்த்தகம் துவங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பயணம்

ராஜஸ்தான் பயணம்

பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா மற்றும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்குக் கடன்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவுக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று இருந்தார். இப்போது ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் உடனான yuva Shakti Samvad என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதைப் பேசினார்.

MSME மூடல்

MSME மூடல்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2019-20 நிதியாண்டில் நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 15,029 MSME நிறுவனங்கள் மூடப்பட்டன என்று டிசம்பர் மாதம் ராஜ்யசபாவில் எம்எஸ்எம்இ-களுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM Nirmala Sitharaman 3 lessons for entrepreneurship; If business doesnt work ready to close and start new

FM Nirmala Sitharaman 3 lessons for entrepreneurship; If business doesnt work ready to close and start new for MSME entrepreneurs at Yuva Shakti Samvad meet between students in kota, Rajastan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X