புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!

மாத சம்பளக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பட்ஜெட் அறிக்கையில் புதிய வருமான வரி பலகை அறிமுகம் செய்யப்படலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

 

காரணம் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், இதில் வெற்றிபெற்றால் பிஜேபி தலைமையிலான 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்.

இதற்கிடையில் கடந்த 3 வருடத்தில் இந்தியாவின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்த நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிதி நிலை, சேமிப்பு விலைவாசி உயர்வால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.'

பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..? பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?

மத்திய பட்ஜெட் 2023

மத்திய பட்ஜெட் 2023

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் தனிநபர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் கட்டாயம் சில தளர்வுகள் வேண்டும் என்பதால் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பல நெருக்கடி

பல நெருக்கடி

மத்திய அரசு ரெசிஷன் அச்சம், பணவீக்கம், சர்வதேச சந்தையில் டிமாண்ட் சரிவு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைக்கு மத்தியில் தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

மாத சம்பளக்காரர்கள்
 

மாத சம்பளக்காரர்கள்

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளக்காரர்கள் தற்போது எதிர்பார்ப்பது போது 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ஜீரோ வருமான வரி விதிப்போ அல்லது 80சி பிரிவில் அதிகப்படியான வரி விலக்கு வரம்பு விரிவாக்கம் போன்ற விஷயங்களை அளிக்க முடியாத நிலையில் தான் மத்திய அரசின் நிதி நிலை உள்ளது.

 கூடுதலாக வரிப் பலகை

கூடுதலாக வரிப் பலகை

இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளது, இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வருமான வரி விதிப்பு

பழைய வருமான வரி விதிப்பு

இந்தப் புதிய வரிப் பலகை பழைய வருமான வரி விதிப்பு முறைக்கும் வர வாய்ப்பு உள்ளதால் இக்குறிப்பிட பிரிவில் இருக்கும் மக்கள் தங்கள் முதலீட்டை சிறப்பாகத் திட்டமிட்டு முதலீடு செய்து வரிப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

பட்ஜெட் ஏ டீம்

பட்ஜெட் ஏ டீம்

மத்திய நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் ஏ டீம் இதை உறுதி செய்யும் பட்சத்தில் இதற்கான அறிவிப்புப் பட்ஜெட் தாக்கலின் போது இடம்பெற்றும், இந்திய பட்ஜெட் அறிக்கை சர்வதேச ரெசிஷன் பாதிப்புகளில் இருந்து நாட்டின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட விலைவாசி உயர்வால் பாதித்துள்ள மக்களை மீட்டுக் கொண்டு வருவது.

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

புதிய வரி பலகையைச் சேர்ப்பது குறித்துப் பல நாட்களாகப் பட்ஜெட் ஏ டீம் ஆலோசனை செய்து அதைப் பட்ஜெட் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையை அளிக்காவிட்டாலும் சிறிய அளவிலான மக்களுக்குக் கட்டாயம் நன்மை பயக்கும்.

வருமான வரி விதிப்பு முறை

வருமான வரி விதிப்பு முறை

தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரிப் பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM Nirmala sitharaman may bring new Income Tax Slab in budget 2023; Big announcement for salaried employees

FM Nirmala sitharaman may bring new Income Tax Slab in budget 2023; Big announcement for salaried employees. FM Nirmala sitharaman budget A team discussed for more than two weeks on this decision
Story first published: Wednesday, January 25, 2023, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X