அதானி பங்குகள் சரிவு.. எல்லாம் 'அவங்க' பாத்துப்பாங்க.. நிர்மலா சீதாராமன் பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்திற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் அதானி பங்குகள் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதானி குழுமம் தொடர்பாகச் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் அவர்களுடைய வேலையைச் முறையாகச் செய்ய அரசு அனுமதிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.

மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..! மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ரிசர்வ் வங்கியின் கருத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு முன், வங்கிகளும் எல்ஐசியும் அதானி குழுமத்தின் மீது தங்கள் கடன் வெளிப்பாட்டின் அளவு என்ன என்பதைச் சொல்லியுள்ளது. எனவே, சந்தை கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

சந்தை கட்டுப்பாட்டாளர்

சந்தை கட்டுப்பாட்டாளர்

மேலும் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் அரசை சாராதவர்கள், சந்தையை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தகுந்த முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க அவர்கள் கையில் விடப்பட்டுள்ளது. சந்தையைச் சிறப்பான நிலைக்குக் கொண்டு வர செபி தனது பணிகளைச் செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம்
 

அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம்

இந்திய சந்தை மொத்தமாக்க அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து உலகளவில் கிரெடிட் சூசி, சிட்டி குரூப், S&P டாவ் ஜோன்ஸ் அமைப்புகள் எடுத்துள்ள வேளையில் இந்தியாவில் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அதானி குழும தரவுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.

9 லட்சம் கோடி ரூபாய்

9 லட்சம் கோடி ரூபாய்

அதானி குழும நிறுவன பங்குகளின் தொடர் சரிவால் கடந்த 7 நாளில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்த நிலையில், அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டு உள்ளது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது ஆர்பிஐ.

ஆர்பிஐ அறிவிப்பு

ஆர்பிஐ அறிவிப்பு

ஆர்பிஐ, இன்று நாட்டின் வங்கி அமைப்பு மீள்தன்மை உடனும், நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் போதுமான மூலதன அளவு, சொத்துத் தரம், பணப்புழக்கம், ப்ரொவிஷன் பாதுகாப்பு மற்றும் லாபம் தொடர்பான பல்வேறு அளவீடுகள் ஆரோக்கியமாக உள்ளது.

ஸ்திரத்தன்மை

ஸ்திரத்தன்மை

இந்திய வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து விழிப்புடன் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட Large Exposure Framework வழிகாட்டுதல்களின் படி இணங்குகிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்துப் பேசுகையில், இந்திய சந்தைகள் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கெளதம் அதானியின் அதானி குழுமத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாக எனத் தெரிவித்துள்ளார்.

 

எல்ஐசி கடன்

எல்ஐசி கடன்

அதானி குழுமத்தின் கடன் மற்றும் ஈக்விட்டிக்கு சுமார் 36,474.78 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 27000 கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM Nirmala Sitharaman says Regulators Will Do Their Job On Adani Stock Crash

FM Nirmala Sitharaman says Regulators Will Do Their Job On Adani Stock Crash
Story first published: Saturday, February 4, 2023, 19:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X