உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்.. ராணி எலிசபெத்தைவிட முன்னிலை.. ஃபோர்ப்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சக்தி வாய்ந்த பெண்ணாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்த பட்டியியலில் தொழிலதிபர்கள் மட்டும் அல்லாமல், அரசியல்வாதிகள், வங்கித் தலைவர்கள், பிரபலங்கள் என பல வகைப் துறை சார்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதிலும் ராணி எலிசபெத் மற்றும் இவாங்கா டிரம்ப் என இவர்களை விட சிறந்தவர் என்றும் புகாழாரம் சூட்டப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த வலிமையான பெண்

உலகின் சிறந்த வலிமையான பெண்

நிர்மலா சீதாராமன் உலகின் 34-வது சிறந்த வலிமையான பெண்ணாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதே 40 வது இடத்தில் ராணி எலிசபெத்தும், 42 வது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் நிதியமைச்சரை விட பின்னுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் நிர்மலா சீதாராமனுக்கு முன் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா உயர்ந்து வருகிறது

உலக அளவில் இந்தியா உயர்ந்து வருகிறது

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் உலகின் குறிப்பிடத்தக்க தலைவர்களை விட, நிதியமைச்சர் முன்னணியில் இருப்பது இந்தியாவின் சக்தி உலக அளவில் உயர்ந்து வருவதை காட்டுவதாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். அதிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து வருவது குறித்து கடுமையான விமர்ச்சனங்களையும் நிர்மலா சீதாராமன் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் உயர்ந்து வரும் பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய கவலைக்குரிய ஒரு காரணியாக மாறி வருகிறது.

சர்ச்சைக்குள்ளாகிய கருத்து
 

சர்ச்சைக்குள்ளாகிய கருத்து

சமீபத்தில் வெங்காயம் பற்றிய தனது கருத்து தொடர்பாக சற்று சர்ச்சையில் சிக்கினார் என்றே கூறலாம். பாராளுமன்றத்தில் வெங்காயத்தின் விலை குறித்து விவாதித்தபோது, தனக்கு விலை கவலை அளிக்கவில்லை. ஏனெனில் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. மேலும் விலை அதிகமுள்ள வெங்காயம், பூண்டினை நாங்கள் விரும்பி சாப்பிடுவதும் இல்லை. ஏனெனில் நான் வெங்காயம் அதிகம் விரும்பாத குடும்பத்திலிருந்து வந்தவள் என்றும் கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல கட்சிகளும், சமூக வலைதளங்களிலும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

பட்டியியலில் இன்னும் சில இந்திய பெண்கள்

பட்டியியலில் இன்னும் சில இந்திய பெண்கள்

மேலும் இந்த உலகின் சிறந்த பெண்கள் பட்டியியலில் இடம் பிடித்த இந்திய பெண்கள் பட்டியியலில் 54வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 65வது இடத்தில் கிரண் மஜூம்தார் ஷாவும், 61வது இடத்தில் ரிஹானா, 66வது இடத்தில் பியோன்ஸ் நோல்ஸ்-ஸூம், 81-வது இடத்தில் செரீனா வில்லியம்ஸூம், 90வது இடத்தில் ரீஸ் விதர்ஸ்பூன் மற்றும் 100வது இடத்தில் கிரெட்டா துன்பெர்க்கும் உள்ளனர்.

முதல் 10 இடங்கள்

முதல் 10 இடங்கள்

இதில் ஜெர்மனின் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தையும், கிறிஸ்டின் லகார்ட், நான்சி பெலோசி, உர்சுலா வான் டெர், லேயன், மேரி பார்ரா, மெலிண்டா கேட்ஸ், அபிகெய்ல் ஜான்சன், அனா பாட்ரிசியா போடின், ஜின்னி ரோமெட்டிம் மர்லின் ஹெவ்சன் முறையே முதல் 10 இடங்களில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forbes announced nirmala sitharaman is a powerful woman ahead of Queen Elizabeth

Forbes announced the World's 100 Most Powerful Women' list. Here Finance Minister Nirmala Sitharaman ranked as the 34th most powerful woman in the world. Here nirmala sitharaman is a powerful woman ahead of Queen Elizabeth.
Story first published: Friday, December 13, 2019, 10:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X