சென்னை, குஜராத் ஆலைகள் நிறுத்தம்.. ஃபோர்டு டீலர்களின் கதி என்ன.. ரூ.2000 கோடி செலவு என்னாவது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா உள்ளிட்ட பல காரணங்களினால், ஆட்டோமொபைல் துறையினர் பலத்த அடி வாங்கினர் எனலாம். எனினும் தற்போது தான் சற்றே மீண்டு வரத் தொடங்கியுள்ளனர்.

பற்பல கார் நிறுவனங்கள் விற்பனை இல்லாமல் தங்களது உற்பத்தினை நிறுத்தி வருகின்றனர். பலர் தங்களது இந்திய உற்பத்தியினை நிறுத்தி, வேறு நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

இப்படி ஆட்டோமொபைல் துறை அடிமேல் அடி வாங்கி வரும் நிலையில், பல நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.

முகேஷ் அம்பானியை இனி கையில் பிடிக்க முடியாது.. இந்தியா முழுக்க EV சார்ஜிங் ஸ்டேஷன்..!முகேஷ் அம்பானியை இனி கையில் பிடிக்க முடியாது.. இந்தியா முழுக்க EV சார்ஜிங் ஸ்டேஷன்..!

மோசமான சரிவில் நிறுவனங்கள்

மோசமான சரிவில் நிறுவனங்கள்

இப்படியொரு மோசமான நிலையில் சிக்கித் தவித்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தற்போது மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, கடுமையான மூலதன பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் பிரச்சனையை சந்தித்துள்ளனர். இப்படி பல மோசமான விஷயங்களுக்கு மத்தியில் தான் அமெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான போர்டு, தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றது.

ஆர்வம் காட்டும் அண்டை நாட்டு நிறுவனங்கள்

ஆர்வம் காட்டும் அண்டை நாட்டு நிறுவனங்கள்

இது அறிந்த விஷயம் தான் என்றாலும், இதனால் இந்த நிறுவனம் தொடர்ந்து மிக மோசமான அளவில் நஷ்டத்தினையும் எதிர்கொண்டுள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய சந்தை என்பதால், இங்கு பெரியளவில் லாபம் ஈட்டலாம் என்ற கணிப்பில் பற்பல நிறுவனங்களும் தங்களது உற்பத்தி, விற்பனையை இங்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆலையை மூட திட்டம்

ஆலையை மூட திட்டம்

ஆனால் தனது எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ள நிலையில் நிறுவனங்கள் ஆலையை மூடிவிடுகின்றன. அப்படித்தான் இந்தியாவில் இருக்கும் நஷ்டத்தில் உள்ள இரு ஆலைகளை மூட திட்டமிட்டுள்ளது ஃபோர்டு இந்தியா. குறிப்பாக ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளைத் தான் மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

பணியிழக்கும் நிலை

பணியிழக்கும் நிலை

இதற்கிடையில் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பல ஆயிரக்கணக்காக ஊழியர்கள், பணியிழக்கும் அபாயம் நிலவி வருகின்றது. எனினும் இந்தியாவில் ஃபோர்டு தனது வாடிக்கையாளர்கள் சேவையைத் தொடர்ந்து செய்யும், இதேபோல் உதிரிப்பாகங்கள் மற்றும் வாரென்டி சப்போர்ட் ஆகியவையும் தொடரும். மேலும் தற்போது ஸ்டாக் இருக்கும் வரையில் உற்பத்தி இருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இனி ஃபோர்டு விற்பனை இருக்காதா?

இனி ஃபோர்டு விற்பனை இருக்காதா?

தற்போது கையிருப்பில் இருக்கும் வாகனங்களை விற்பனை செய்த பின்பு, ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல கார்களையும், எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. எனினும் ஏற்கனவே விற்பனை இல்லாமல் பெரும் நஷ்டத்தில் உள்ள டீலர்களுக்கு ஃபோர்டின் இந்த நடவடிக்கை இன்னும் நஷ்டத்தினையே கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு என்னாவது?

முதலீடு என்னாவது?

இது குறித்து FADA அறிக்கையில், ஃபோர்டு டீலர்கள் இந்த நிறுவனத்தின் அதிரடி முடிவால், அதன் தாக்கத்தினை உணர்வார்கள். அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தினை காணலாம். ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு மிக அதிர்ச்சி அளிப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 40,000 பேரை பணியமர்த்தியிருக்கும் டீலர்கள், உள்கட்டமைப்புக்காக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

ஆட்டோமொபைல் துறையினர் அதிர்ச்சி

ஆட்டோமொபைல் துறையினர் அதிர்ச்சி

தற்போது பல ஆயிரம் பேர் இதனால் தங்களது வேலையினை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக செய்யப்பட்ட 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடும் கேள்விக் குறியாகியுள்ளது. மொத்தத்தில் டீலர்களுக்கு இது பெருத்த நஷ்டமே. அதோடு ஊழியர்களின் வேலையிழப்பு என பல தரப்பினரும் ஃபோர்டு இந்தியாவினால் பாதிக்கப்படலாம்.

Array

Array

இது குறித்து ஃபடாவின் தலைவர் வின்கேஷ் குலாட்டி, ஆட்டோமொபையில் துறையின் சில்லறை விற்பனையாளர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் இங்கு 170 டீலர்கள், 391 விற்பனையகங்களை கொண்டுள்ளனர். இதற்காக 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடும் செய்துள்ளனர்.

புதிய டீலர்கள்

புதிய டீலர்கள்

அதோடு வங்கிக் கடன் மூலம் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 வாகனங்களுக்கு மேலாக விற்பனையாளர்களை வைத்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கூட ஃபோர்டு நிறுவனம் டீலர்களை நியமித்து வந்தது. அவர்கள் இன்னும் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தினை காண்பார்கள்.

தொடர்ந்து வெளியேற்றம்

தொடர்ந்து வெளியேற்றம்

கடந்த 2017 முதல் ஜெனரல் மோர்ட்டார்ஸ், மேன் டிரக்ஸ், ஹார்லி டேவிட்சன், யுஎம் லோஹியா, மல்டிபிளை பை நைட் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு பிறகு, போர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறும் 5 வது மிகப்பெரிய, ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனமாகும்.

டீலர்களுக்கு பாதுகாப்பு

டீலர்களுக்கு பாதுகாப்பு

தொழில்துறைக்கான பாரமன்ற குழு தொடர்ந்து Franchise Protection Act அமல்படுத்த கூறி வருகின்றது. இது குறித்து கடந்த டிசம்பர் 2020ல் இந்த குழு கூறியது குறிப்பிடத்தக்கது. இது வாகன விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதையடுத்து, நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆக அரசு இதனை அமல்படுத்த வேண்டும் என்பதே இத்துறையினரின் பெரும் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

ஏற்றுமதி தொடரும்

ஏற்றுமதி தொடரும்

போர்டு நிறுவனம் அதன் உற்பத்தினையினை நிறுத்துவதாக கூறியிருந்தாலும், அதன் சனந்த் ஆலையில் இருந்து இயந்திரங்கள் தயாரிப்பது தொடரும் என தெரிவித்துள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி தொடரும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் டெல்லி, சென்னை, மும்பை, சனந்த் மற்றும் கொல்கத்தாவில் தனது உதிரி பாகங்களை பராமரித்து வருவதாகவும், அதன் டீலர் நெட்வொர்குடன் ஆதரவை கொடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

டீலர்கள் நிலை என்ன?

டீலர்கள் நிலை என்ன?

எனினும் டீலர் நெட்வொர்க் மறுசீரமைப்பு என்ற கூறியுள்ள நிலையில், டீலர்களுக்கு ஏதேனும் சாதகமான அறிவிப்புகளை பின்னர் கொடுக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது. என்ன தான் நடக்கிறது என கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ford shut in india: FADA says Ford dealers may face huge loss ahead of shuts production

Ford India latest News updates in Tamil: Ford dealers in India are staring at huge losses with the automaker deciding to shut production in the country with immediate effect, automobile dealers' body Says FADA.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X