இந்த 8 விஷயங்களையும் மனதில் வைத்துக்கோங்க.. பட்டியல் போட்ட ரகுராம் ராஜன்.. என்ன அது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பட்ஜெட் நெருங்கிக் கொண்டுள்ள நிலையில் பல்வேறு நிபுணர்களும் தொடர்ந்து தங்களது பரிந்துரைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பட்ஜெட் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Raghuram Rajan's Key Things For Union Budget 2022 | Oneindia Tamil

பட்ஜெட்டில் உற்பத்தி துறை மற்றும் விவசாயம் பற்றி நினைப்பதை விடுத்து, அதனை தாண்டியும் யோசிக்க வேண்டும் என ETக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..! TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!

இதற்கிடையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள் அது என்னென்ன என பார்க்கலாம்.

நம்பிக்கையை பெறுங்கள்

நம்பிக்கையை பெறுங்கள்

பொதுமக்களின் நம்பிக்கையை தக்கவைத்து கொள்வது எந்த ஒரு பட்ஜெட்டின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

பொருளாதாரத்தினை எப்படி மீட்பது என்பது குறித்தான ஒரு திட்டவட்டமான பாதை இருக்க வேண்டும். அது நம்பகமானதாக இருக்க வேண்டும். இந்த கட்டத்தில் தேவையை ஊக்குவிக்க வேண்டும். உள்கட்டமைப்பு துறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்ததை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் உற்பத்தி துறையினை மட்டும் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். சேவை துறை பற்றியும் யோசிக்க வேண்டும்.

 

நடப்பு பற்றாக்குறை

நடப்பு பற்றாக்குறை

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் தங்கம் இறக்குமதி உள்ளிட்டவை, நடப்பு பற்றாக்குறையை ஊக்குவிக்கின்றன. இது இன்னும் கவலையளிக்கும் நிலையை எட்டவில்லை. இதற்கிடையில் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனினும் இந்தியா அதை புறக்கணிக்க முடியாது. இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

வட்டியை கண்கானியுங்கள்

வட்டியை கண்கானியுங்கள்

வட்டி விகிதத்தின் இயக்கத்தினை கண்கானிக்கத் தொடங்குவதற்கான நேரம் வந்து விட்டது. பல நாடுகளும் ஏற்கனவே வட்டி விகிதத்தினை உயர்த்த தொடங்கி விட்டன. ஆக இந்தியா அதற்கும் தயாராக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒன்று. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்த பின்னர், மற்ற இடங்களில் அதன் சிக்கல்கள் இருக்கும். ஆக அதனை கவனமுடன் திட்டமிட்டு கையாள வேண்டும்.

பொருளாதார மீள்ச்சி

பொருளாதார மீள்ச்சி

ஏற்றுமதியாளர்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட சில சேவை வணிகங்களில் தேவையானது மீண்டு வந்து செயல்பட்டு கொண்டுள்ளது. அதே உயர் நடுத்தர வர்க்கத்திலும் அதே வழியில் சிறப்பாக செயலபட்டு கொண்டுள்ளன. ஆனால் கீழ் நடுத்தர வர்த்தக மக்கள், இவர்கள் தான் அதிகம் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். விவசாயத் துறையில் வேலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் வளரும் நாடுகளில் அப்படி இருப்பதாக தெரியவில்லை.

நுகர்வு சரிவு

நுகர்வு சரிவு

இந்த பெருந்தொற்று காரணமாக நகரங்கள் வேலைகள் குறைந்து விட்டன. இதனால் நகரங்களில் உள்ள மக்கள் கிராமங்களுக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் நுகர்வானது குறைந்துள்ளது. மொத்தத்தில் தேவையானது வீழ்ச்சி கண்டுள்ளது. இது வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்குவது கடினம்

கடன் வாங்குவது கடினம்

மக்கள் கடன் வாங்குவதும் கடினமாகியுள்ளது. கடன் கொடுத்தவர்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் கடன் விகிதம் குறைந்துள்ளது. நிதி நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் புதிய கடன் கொடுக்க போதுமானதாக இல்லை. இந்தியாவுக்கு கடன்களுக்கான தேவை உள்ளது. ஆனால் அதனை கொடுக்க முடியவில்லை. மானிட்டரி பாலிசியால் அதனை சரி செய்ய முடியாது. ஆக இதுவும் பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

 நகர்புற ஏழைகள்

நகர்புற ஏழைகள்

கிராமப்புறங்களில் உள்ளது போல, நகர்புறம் ஏழை நடுத்தர மக்களுக்கு MGNREGA போன்ற திட்டங்கள் இல்லை. ஆக தொற்று நோய் காலத்தில் அவர்கள் கிராமப்புறம் செல்ல நினைக்கிறார்கள். ஆக இந்தியாவில் நகர்புற ஏழை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வர வேண்டும்.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்கம் என்பது எவ்வளவு அதிகரிக்கிறதோ? அந்தளவுக்கு கடினமானதாக இருக்கும். இந்தியாவில் பணவீக்கத்திற்கு இலக்கு உள்ளது. இது இல்லாவிட்டால் கொரோனா காலத்தில் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ஆக பணவீக்கம் குறித்த கவலை இல்லாமல் மெத்தனமாக இருக்க முடியாது. மத்திய வங்கி அதனை கட்டுக்குள் கொண்டு வர வரவேண்டும்.

விவசாய மசோதா

விவசாய மசோதா

மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து ஒரு திட்டத்தினை வகுக்க வேண்டும். மக்களிடம் பேச வேண்டும். அதற்கு முக்கிய பாடம் தான் விவசாய மசோதா. அதில் சில நல்ல விஷயங்களும் இருந்தன. ஆனால் மோடி அரசாங்கம் அதனை முறையாக செய்ய தவறிவிட்டது என கூறியுள்ளார்.

இப்படி பல விஷயங்களையும் வரவிருக்கும் பட்ஜெட்டில் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாக கூறியுள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

former RBI governor raghuram rajan's key things for union budget

former RBI governor raghuram rajan's key things for union budget/இந்த 8 விஷயங்களையும் மனதில் வைத்துக்கோங்க.. பட்டியல் போட்ட ரகுராம் ராஜன்.. என்ன அது?
Story first published: Friday, January 21, 2022, 14:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X