பங்குச்சந்தையில் அவ்வப்போது ஐபிஓ வெளியிடப்படும் என்பதும் நல்ல நிறுவனங்களின் ஐபிஓக்களை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் போட்டி போடுவார்கள் என்பது தெரிந்ததே.
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தாலும் மற்ற தனியார் நிறுவனங்களின் ஐபிஓக்கள் நல்ல லாபத்தை கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் அடுத்த வாரம் நான்கு நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
4 புதிய ஐபிஓக்கள்
அடுத்த வாரம் பங்குச்சந்தையில் நான்கு ஐபிஓக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை ஆர்க்கியன் கெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட், கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா மற்றும் ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் சுமார் ரூ.5,020 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ தேதி
ஆர்க்கியன் கெமிக்கல்ஸ், ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஆகிய இரண்டும் நவம்பர் 9 ஆம் தேதி ஐபிஓ தொடங்கி நவம்பர் 11 ஆம் தேதி முடிவடையும், அதேபோல் கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட்டின் ஐபிஓ நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி ஐபிஓ நவம்பர்14 ஆம் தேதி முடிவடையும் என்றும், ஐநாக்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் ஐபிஓ நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்கியன் கெமிக்கல்ஸ்
ஆர்க்கியன் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் ரூ.1,462 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ விலை ரூ.386-407 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ்
ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் ஐபிஓ மூலம் ரூ.1,960 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ விலை 450-474 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கெய்ன்ஸ் டெக்னாலஜி
கெய்ன்ஸ் டெக்னாலஜி மூலம் சுமார் ரூ.856 கோடியை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ விலை ரூ.559-587 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட்
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.740 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ ரூ.370 கோடிக்கு புதிய வெளியீடு மற்றும் ரூ.370 கோடி வரை விற்பனைக்கான சலுகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications