சீனாவை உலுக்கி எடுக்கும் கொரோனா.. மீண்டும் வெடித்த போராட்டம்.. பாக்ஸ்கான் ஆலையில் என்ன ஆச்சு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றானது கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் விலைமதிக்க முடியாத உறவுகளை இழந்து தவித்தனர்.

 

ஆனால் இன்று வரையிலும் கூட ஆங்காங்கே கொரோனா பரவல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாக கூறப்படும் சீனாவில் தான் தற்போது நிலைபெற்றுள்ளது.

சீனாவில் இன்று ஒரு நாள் கொரோனா பரவலானது புதிய உச்சத்தினை எட்டியுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் மேற்கோண்டு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பிடியில் சீனா

கொரோனாவின் பிடியில் சீனா

உலகம் முழுக்க பற்பல நாடுகளும் கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்த நிலையில், சீனாவில் அதன் பாதிப்பு பெரியளவில் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் உலகம் முழுக்க அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில், சீனாவில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. சீனா கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஜீரோ கோவிட் பாலிசியினை கடைபிடித்து வருகின்றது.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

சீனாவின் இந்த கடுமையான விதிமுறைகள் ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்திய நிலையில், மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது லாக்டவுன் நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக அமலில் உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சீனாவின் பல முக்கிய பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக சீனாவின் பல முக்கிய தொழில்நுட்ப நகரங்கள் மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

கட்டுபாடுகளுடன் செயல்படலாம்
 

கட்டுபாடுகளுடன் செயல்படலாம்

இதனால் தொழிற்சாலைகள் முடக்கப்படும் அபாயம் இருந்தாலும், கடந்த முறை போல் அல்லாமல் , இந்த முறை கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் செயல்பட சீன அரசு அனுமதி கொடுத்துள்ளது.

எனினும் ஆலைகளில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சீனாவின் முக்கிய ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாகும். இந்த ஆலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

ஊழியர்களுக்கு தட்டுப்பாடு

ஊழியர்களுக்கு தட்டுப்பாடு

இந்த ஆலையில் சமீபத்தில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஊழியர்கள் மதில் சுவர்களை ஏறி தாண்டி குதித்து ஓடும் அளவுக்கு கட்டுபாடுகள் இருந்தது. இதனை கட்டுப்படுத்த நவம்பர் மாதம் முழுக்க ஊழியர்களுக்கு பற்பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் கணிசமான பணியாற்றி வந்தாலும், ஆலையில் இருந்தே பணி புரிவோருக்கும் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

 போராட்டத்தில் ஊழியர்கள்

போராட்டத்தில் ஊழியர்கள்

இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் சூழல் இருந்து வருகின்றது. மேலும் மிகப்பெரிய ஆலையில் ஆள்பற்றாக்குறையால் அதிக நேரம் பணி புரியும் சூழலும் இருந்து வருகின்றது. எனினும் கொரோனா அச்சத்தால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லப்போனால் ஊழியர்கள் அங்குள்ள கேமராக்கள் மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பல பொருட்களை அடித்து உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

போனஸ் கொடுக்கப்படவில்லை

போனஸ் கொடுக்கப்படவில்லை

கொரோனாவை ஊழியர்கள் திறனற்ற முறையில் கையாண்டு வருவதாகவும், ஐபோன் ஆலையில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட உறுதியளிக்கப்பட்ட போனஸ் தொகை சரியாக கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் தான் ஊழியர்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என்ற போராட்டம் எழுந்துள்ளது.

சரியான பாதுகாப்பில்லை

சரியான பாதுகாப்பில்லை

மேலும் ஊழியர்களுக்கு சரியான பாதுகாப்பில்லை என்றும், கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான தனி பகுதிகள் எதுவும் தனியாக இல்லை. மற்ற ஊழியர்களுடன் தங்களது தங்கும் அறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 பதறியடுத்து ஓடிய ஊழியர்கள்

பதறியடுத்து ஓடிய ஊழியர்கள்


சீனாவில் லாக்டவுன் அமல்படுத்த ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே, ஊழியர்கள் பதறியடுத்து ஓடிய வீடியோக்கள் வெளியாகின. தற்போது வெளியேறிய ஊழியர்களுக்கு பதிலாக பலரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு இடையேயான இடைவெளி என்பது மிக குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாக்ஸ்கானின் முக்கியத்துவம்

பாக்ஸ்கானின் முக்கியத்துவம்

பாக்ஸ்கான் மொத்த ஐபோன் ஏற்றுமதியில் உலகம் முழுக்க 70% ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் மிக குறைந்த அளவே இருந்து வருகின்றது. எனினும் இனி அந்த விகிதம் மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போனஸ்

போனஸ்

பாக்ஸ்கான் ஆலையில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸினை கொடுக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

foxconn offers staff 1400 dollars to leave after violence at china's mega factory

Reports have surfaced that the foxconn plant has started paying the $1,400 bonus it was due to workers amid the protests
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X