டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், இந்தியா பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற பயம் நிலவி வருகிறது.
மத்திய மாநில அரசுகள் கொரோனாவின் தாக்கத்தினை அதிகரிக்காமல் தடுக்க, தற்போது மூன்றாவது முறையாக லாக்டவுனை நீட்டித்துள்ளது. இதனால் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி காணும் என்ற நிலையே நிலவி வருகிறது.
இதனால் தொடர்ந்து அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வெளியேறி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மூலதன சந்தையிலிருந்து 15,403 கோடி ரூபாய் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் பங்குகளில் இருந்து 6,884 கோடி ரூபாயும், இதே கடன் சந்தையில் 8,519 கோடி ரூபாயும் வெளியேறியுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரையில் மொத்தம் 15,403 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
இதே கடந்த மார்ச் மாதத்தில் பங்குகள் மற்றும் கடன் சந்தையில் இருந்தும் மொத்த எஃப் பி 1.1 டிரில்லியன் ரூபாய் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்தியாவிற்குள் வரும் வரத்துகளில், கிட்டதட்ட அனைத்தும் NBFC மற்றும் பார்மா துறை மூலமும் வருவதாக Growwவின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ ஜெயின் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் முதலீட்டாளர்கள் தங்கள் பாதுக்காப்பு கருதி தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் குறைந்த அளவிலான முதலீடுகள் தான் வெளியேறியுள்ளன. எனினும் தற்போது நாட்டில் நிலவி வரும் நிலையில், இந்த வெளியேற்றம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுபடுத்தி வருகின்றது. அதும் அட்டும் அல்ல பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், அந்த நடவடிக்கையும் முதலீட்டாளர்களிடையே பிரதிபலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அரசு பொருளாதார வீழ்ச்சியினை தடுக்க அவ்வப்போது நடவடிகக்கைகளை எடுத்து வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், இன்னும் அவை இன்னும் போதுமானதாக இல்லை என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருவதாக பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.