கூகுள் மீது 268 மில்லியன் டாலர் அபராதம்.. பிரான்ஸ் அரசின் அறிவிப்பால் ஷாக்.. என்ன நடந்தது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பல முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் டிஜிட்டல் சேவை வரி, மோனோபோலி ஆதிக்கம் என உலக நாடுகளில் அடுத்தடுத்துப் பிரச்சனைகளில் சிக்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் வர்த்தகப் போட்டி எதிர்ப்பு அமைப்பு கூகுள் மீது சுமார் 220 மில்லியன் யூரோ (268 மில்லியன் டாலர்) அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது.

கூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..!கூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..!

பிரான்ஸ் அரசு - கூகுள்

பிரான்ஸ் அரசு - கூகுள்

பிரான்ஸ் நாட்டில் கூகுள் தனது ஆன்லைன் விளம்பர வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் நிலையில், தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளது எனக் குற்றம்சாட்டி அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அபராதம்

கூகுள் நிறுவனத்தின் அபராதம்

கூகுள் நிறுவனம் தனது சக போட்டி நிறுவனங்கள் அதாவது குறிப்பிட்ட வர்த்தகச் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள், மொபைல் சைட் மற்றும் அப்பிளிகேஷன் வைத்துள்ளோர் மீது அபராதம் விதித்து வருகிறது. இது ஒருபோதும் ஏற்க முடியாது மற்றும் தவறானது எனப் பிரான்ஸ் நாட்டின் வர்த்தகப் போட்டி எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கூகுள் முடிவு
 

கூகுள் முடிவு

பிரான்ஸ் நாட்டின் வர்த்தகப் போட்டி எதிர்ப்பு அமைப்பு (anti-competition watchdog) கூகுள் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் பிற நிறுவனங்களைக் குறைந்து மதிப்பிடக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குக் கூகுள் நிறுவனம் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அபராத தொகையை முழுமையாகச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவை வரிப் பிரச்சனை

டிஜிட்டல் சேவை வரிப் பிரச்சனை

சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு வெளிநாட்டு இண்டர்நெட் நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 'டிஜிட்டல் சேவை வரி' விதிக்க முடிவு செய்தது, இந்தியாவின் இந்த முடிவை எதிர்த்து அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக வரி விதித்தது.

அமெரிக்க அரசு இந்தியா மட்டும் அல்லாமல் ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகள் மீதும் டிஜிட்டல் சேவை வரி விதிப்பிற்கு எதிராக வரியை விதித்தது.

 

தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

இந்நிலையில் உலக நாடுகள் விதித்துள்ள டிஜிட்டல் சேவை வரி குறித்துச் சர்வதேச வரி விதிப்பில் பலதரத்தில் OECDல் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 180 நாட்களுக்கு டிஜிட்டல் சேவை வரிக்கு எதிராக விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்துள்ளது அமெரிக்க அரசு. இதற்கான தீர்வை எட்டுவதில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

France fines Google USD 268 million for abusing its dominant position in online advertising business

France fines Google USD 268 million for abusing its dominant position in online advertising business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X