ரெசிஷனில் மூழ்கிய பிரான்ஸ், ஜெர்மனி.. ஆட்டம் ஆரம்பம்.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த நிலையில் பல நாடுகள் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் என்றும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் எனப் பல தரப்பினர் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஐரோப்பிய யூனியனில் இரு முக்கியமான நாடுகள் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தச் செய்தி வளரும் நாடுகளுக்குப் பெரிய அளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெசிஷனில் மாட்டிய நாடுகள் எது..? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?

உலக நாடுகளின் ரெசசனால் இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பலன் இருக்கா? உலக நாடுகளின் ரெசசனால் இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பலன் இருக்கா?

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பாவில் இரு முக்கியப் பொருளாதார நாடுகளில் தனியார்த் துறை செயல்பாடுகள் நவம்பர் மாதம் மந்தமடைந்து சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் பிரிட்டனை போலவே ஏற்கனவே ரெசிஷனுக்குள் மூழ்கியிருப்பதாகவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

PMI குறியீடு

PMI குறியீடு

எஸ் ஆண்ட் பி குளோபல் பிளாஷ் பர்சேசிங் மேனேஜர் இன்டெக்ஸ் தரவுகள் படி பிரான்ஸ் நாட்டின் PMI குறியீடு கொரோனாவுக்குப் பின்பு முதல் முறையாக 48.8 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பொதுவாக PMI குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சி பாதையில் இருப்பதாகப் பொருள், 50 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் சரிவில் இருப்பதாகப் பொருள்.

பிரான்ஸ், ஜெர்மனி

பிரான்ஸ், ஜெர்மனி

இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் PMI குறியீடு 48.8 புள்ளிகளாகக் குறைந்த நிலையில், ஜெர்மனி நாட்டின் PMI குறியீடு 46.4 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. இவ்விரு நாடுகளும் பொருளாதார வல்லுனர்கள் கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் மோமான நிலையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

குளிர்காலம்

இதே வேளையில் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் குளிர்காலத்திற்குள் நுழையும் நிலையில் எரிபொருள் பற்றாக்குறை, பணவீக்க உயர்வு, உற்பத்தி சரிவு ஆகியவை உச்சத்தைத் தொடும் இதனால் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படும்.

OECD அமைப்பு

OECD அமைப்பு

இதேவேளையில் OECD அமைப்பு 2023ல் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதமாக இருக்கும் என்றும், பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கும் எனக் கணித்துள்ளது.

ஜெர்மி ஹன்ட்

ஜெர்மி ஹன்ட்

பிரிட்டன் நாட்டின் நிதிமையச்சரான ஜெர்மி ஹன்ட் கடந்த வாரம் பேசுகையில், பிரிட்டன் ஏற்கனவே ரெசிஷனில் தான் உள்ளது என அறிவித்தார். இதுவரையில் எந்தொரு நாடும் ரெசிஷனுக்குச் சென்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் பிரிட்டன் நாடு ரெசிஷனுக்குச் சென்று விட்டதாக ஒப்புக்கொண்டது.

ரெசிஷன்

ரெசிஷன்

இதைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது. முன்னணி பொருளாதார நாடுகள் ரெசிஷனுக்குள் நுழைவது மூலம் இந்த நாடுகளை நம்பியிருக்கும் பிற நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும்.

இந்திய டெக்ஸ்டைல் துறை

இந்திய டெக்ஸ்டைல் துறை

உதாரணமாக இந்தியாவின் டெக்ஸ்டைல் துறைக்கு ஐரோப்பா மிகவும் முக்கிய வர்த்தக நாடாக இருக்கும் நிலையில் தற்போது பிரான்ஸ், ஜெர்மனி ரெசிஷனுக்குள் நுழைந்த காரணத்தால் புதிய ஆர்டர்கள் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் இதனால் இந்திய டெக்ஸ்டைல் துறையில் உற்பத்தி குறைக்கப்பட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

France, Germany fall into recession; Europe top two economy contracts after britain

France and Germany fall into recession; Europe top two economy contracts after britain
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X